Sunday, April 24, 2011

எட்டு ரூபாய்க்கு எண்பது பொய்கள்.

“எட்டு ரூபாய் கொடுத்தால் எண்பது பொய் சொல்வான். அவன்   யார் ? “    இந்நேரம் விடை கண்டு பிடித்திருப்பீர்கள். கண்டு பிடிக்காதவர்களுக்காக.. அவன் தான் ஜுனியர் விகடன்.


சவுக்கு வாசகர்களில் சிலர், நக்கிறான்…. மன்னிக்கவும்… நக்கீரன் என்று விடையளிக்கக் கூடும். அந்த விடை தவறு. அந்த விடைக்கான விடுகதை என்ன தெரியுமா ?
 “எட்டு ரூபாயில் எட்டு “கிளு கிளு“ கதைகள் தருவான். அவன்   யார் ? “ அல்லது “எட்டு ரூபாயில், எட்டு செக்ஸ் கதைகள் தருவான். அவன் யார் ? “ அல்லது “எட்டு ரூபாயில் எட்டப்பன் வேலை பார்ப்பான். அவன் யார் ? “ இது போன்ற விடுகதைகளுக்கான விடை தான் நக்கீரன். நக்கீரனைப் பற்றி சவுக்கு தனியே சுழற்றப் படும்.
 இந்த ஜுனியர் விகடனின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பொட்டு சுரேஷ் விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த போதே சவுக்கு சுழற்றப் பட வேண்டும் என்றுதான் விரும்பியது. ஆனால் சில
நண்பர்கள், வேண்டாம், ஜுனியர் விகடன் தன் போக்கை திருத்திக் கொள்ளும், பொறுமையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அப்போது சவுக்கு சுழற்றப் படவில்லை.
 ஆனால் இன்று சவுக்கு சுழற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு, இந்த வாரத்தில் வந்திருக்கக் கூடிய “எங்கெங்கு காணினும் ஏடிஜிபிக்கள்“ என்ற கட்டுரை நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.





இந்த வார ஜுனியர் விகடனில் ஜாங்கிட்டும், ஜாபர் சேட்டும் நண்பர்களாக சிரித்துப் பேசுவது போல ஒரு படத்தை வெளியிட்டு, பொய்யையும் புனை சுருட்டையும், உண்மை போல திரித்து எழுதியுள்ளார் இரா.சரவணன் என்ற ஜுனியர் விகடனின் தலைமை நிருபர்.

இவர் எழுதியுள்ள இந்த புனை சுருட்டை பற்றி சிறிது ஆராய்வோம்.

இவர் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு, எங்கெங்கு காணினும் ஏடிஜிபி.   அந்தக் கட்டுரையின் சாரம் என்னவென்றால், தமிழகத்தில் கூடுதல் டிஜிபிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதாம். இதையடுத்து, தற்பாது உள்ள ஐஜிக்களில் 13 பேர் கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறப் போகிறார்கள் என்று எழுதியிருக்கிறது ஜுனியர் விகடன்.

உண்மை என்னவென்றால், இத்தனை கூடுதல் டிஜிபிக்கள் பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பே துளியும் இல்லை.   காவல்துறையில், கூடுதல் எஸ்பி பதவியிலிருந்து, எஸ்பி பதவிக்குக் கூட, இது போல ஒட்டு மொத்தமாக பதவி உயர்வு வழங்குவது கிடையாது.
அப்படி இருக்கையில், இப்படி முழுக்க முழுக்க பொய்யாக ஒரு கட்டுரையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன ?

அவசியம் என்னவென்றால், ஜுனியர் விகடனில் வெளிவந்திருக்கும் படத்தைப் போல ஜாங்கிடும், ஜாபர் சேட்டும், ஒன்றும் பால்ய கால சிநேகிதர்களெல்லாம் கிடையாது. ஜாங்கிடுக்குத் தான் கூடுதல் டிஜிபி பதவி உயர்வு இப்போது வர வேண்டும். ஆனால், ஜாங்கிட் பதவி உயர்வு பெற்று விட்டால், தனக்கு மேலதிகாரியாக உளவுத் துறை கூடுதல் டிஜிபியாகக் கூட வரக் கூடும் அல்லவா ? அப்படி உளவுத் துறைக்கு கூடுதல் டிஜிபியாக வரா விட்டாலும், முக்கியமான சட்டம் ஒழுங்கு அல்லது நிர்வாகப் பதவிக்கு வந்து விட்டாலும், ஜாபர் சேட்டின் சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து. ஆகையால், தன்னுடைய ஊழல்கள் வெளி வந்து விடும். ஆகையால், ஜாங்கிட் உள்ளிட்ட அவரது 1985ம் ஆண்டு பேட்சுக்கு பதவி உயர்வு வழங்கும் போதே 1986ம் ஆண்டு பேட்சுக்கும் பதவி உயர்வு வருவது போல செய்து விட்டால், தானும் ஏடிஜிபி ஆகி விடுவோம். ஆகி விட்டால் உளவுத் துறைக்கு நாமே போட்டியில்லாத சக்ரவர்த்தி ஆகி, நமது வசூல் வேட்டையை தங்கு தடையின்றி தொடரலாம் என்பதுதான் அந்த எண்ணம்.

ஆனால், விதிகள் அப்படி இல்லையே…. கூடுதல் டிஜிபி பதவி என்பது கருணாநிதி நினைத்தால் கூட இஷ்டத்துக்கு உருவாக்க முடியாது. அது ஒரு நீண்ட Process. மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகிய அமைச்சகங்கள் அனைத்தும் இதற்கு ஒப்புதல் கொடுத்தால் தான் உருவாக்க முடியும். மேலும், இது போல ஒரு மாநிலத்துக்கு மட்டும், இஷ்டத்துக்கு கூடுதல் டிஜிபிக்கள் பதவியை வழங்குவது மற்ற மாநிலங்களில் சிக்கலை ஏற்படுத்தும். ஆகையால் அந்தந்த மாநிலங்களில் மக்கட் தொகை, பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கணக்கில் கொண்டு தான் ஒரு மாநிலத்தில் எஸ்பி பதவி எத்தனை, அதில் ஐபிஎஸ் எத்தனை, ஐபிஎஸ் அல்லாத எஸ்பிக்கள் எத்தனை, டிஐஜிக்கள் எத்தனை, ஐஜிக்கள் எத்தனை, கூடுதல் டிஜிபிக்கள் எத்தனை என்று முடிவு செய்யப் படும்.

இதெல்லாம் ஜுனியர் விகடனுக்கு தெரியுமா என்றால் தெரியும்.   காவல்துறையைப் பற்றி கட்டுரை எழுதுபவர்களுக்கு இதெல்லாம் அடிப்படை.

பிறகு ஏன் இப்படி ஒரு அப்பட்டமான ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை எழுதியிருக்கிறார்கள் என்றால், இதை எழுதிய அந்த இரா.சரவணனுக்கே வெளிச்சம்.

இரா.சரவணன் என்பவர், ஜாபர் சேட்டின் அல்லக்கை என்றால் அது குறைவான மதிப்பீடு. அடிமை என்பது பொருத்தமான வார்த்தை. இந்த கட்டுரையின் மூலம், எழுத்து தர்மத்தையும், பத்திரிக்கை தர்மத்தையும், மிக மிக மோசமான முறையில் மீறியிருக்கிறார் இரா.சரவணன்.

இரா.சரவணனின் இந்த அயோக்கியத்தனத்திற்கு துணை போன, செய்தி ஆசிரியர், ஆசிரியர் அனைவருக்கும் சவுக்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

வாசகன் என்பவன் பத்திரிக்கையை வாழவைக்கும் கடவுள் என்றே சவுக்கு பார்க்கிறது. வாசகன் தான் பத்திரிக்கையின் ஆக்சிஜன். அவன் இல்லாவிட்டால், இந்த விகடன் சாம்ராஜ்யம் இன்று இல்லை. அச்சில் வரும் அத்தனையும் உண்மை என்று இன்னும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எட்டு ரூபாய் கொடுத்து பத்திரிக்கையை வாங்கும் அந்த வாசகனை பைத்தியக்காரன் என்று நினைக்கும் விகடன் நிறுவனத்தின் ஆணவமும், அகந்தையும் மிக மிக கண்டிக்கத் தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...