Monday, April 18, 2011

எம்.ஜி.ஆர் தொடங்கிய 108 ஆம்புலன்ஸ் திட்டம்#ஆதாரம் காட்டும் ஜூனியர் விகடன்

இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததே எம்.ஜி.ஆர் தான்.என்கிறார் பத்திரிக்கையாளர் அன்பு.எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த திட்டத்துக்கு கலைஞர் சொந்தம் கொண்டாடுவது நகைப்புக்குரியது..ஆமாம்..பழைய டப்பாவுக்கு புது பெயிண்ட் அடித்துவிட்டு நான்தான் நான்தான் என்று தம்பட்ட அரசியல் செய்து,சொந்தம் கொண்டாடுகிறார்கள்.30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5 ஆம் தேதியே இந்த திட்டத்தை கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர் .அதன் பிண்ணனி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்..


டாக்டர் நடராசன் ,அவசர் மற்றும் விபத்து மருத்துவ சேவை திட்டம் தொடர்பாக வரைவு திட்டத்தை தமிழக அரசின் திட்ட குழுவிடம் ஒப்படைத்தார். .உடனே திட்டக்குழுவும் இதற்கு ஒப்புதல் அளித்தது.இதை தொடர்ந்தே இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார்,அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் முராரி.டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி,அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத்திட்டம் என்று இதற்கு பெயரும் சூட்டப்பட்டது

இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.முதல் கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ர விதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன.கூடவே உயிர்காக்கும் கருவிகளும் மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன..1980 ல் உள்துறை செயலாளராக இருந்த எச்.எம்.சிங்,திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார்.திட்டம் சிறப்பாக செயல்படுவதற்காக காவல்துறை ஆணையர் ஸ்ரீபால் ,மெட்றாஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன்,மருத்துவ கல்வி இயக்குனர் லலிதா காமெஸ்வரன் ,சென்னை மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன் டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கண்காணிப்பு குழு ஒன்றியும் எம்.ஜி.ஆர் அமைத்தார்..


ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர் விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன..குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேர மும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன..மேலும் 30 தனியார் மருத்துவமனைகளும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு ,புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழிவகை செய்யப்பட்டன..இந்த ஆம்புலன்ஸ்களில் பணி செய்வதற்கு புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்பட்டது...அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவை திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு 7 வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்த திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் எம்.ஜி.ஆர் இயற்கை எய்த,ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது..1989 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சுகாதாரத்துர்றை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி,முதல்வேலையாக அந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்தினார்.ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிட்டார்.ஆக,எம்.ஜி.ஆர் கொண்டுவந்த இலவச ஆம்புல்ன்ஸ் திட்டத்தை திட்டம் போட்டு ஒழித்துகட்டியது தி.மு.க.


.ஆனால் இப்போது அதே திட்டத்தை 108 ஆம்புலன்ஸ் என்று பெயர் மாற்றி வைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்த தகவல்களை தொடர்ச்சியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற்றேன்..ஈவி.கே.எஸ் .இளன்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ் கருணாநிதி வரை எல்லோரும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை வைத்து மக்களை குழப்பி ஓட்டு அரசியல் செய்கிறார்கள்.அதனால்தான் இந்த திட்டத்தை பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டு வர நீண்ட காலம் முயற்சி செய்தேன்.இனி மேலும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடுவோர்களின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது.என்கிறார் பத்திரிக்கையாளர் அன்பு.

எம்.ஜி.ஆர் எழுந்து வந்தா கேட்கபோகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்ன என்ன பொய்கள் எல்லாம் உலவுகிறதோ...

நன்றி-ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...