இந்திய பெருஞ்சுவர்! – அதிசய அரியதோர் அதிசய தகவல்
இந்திய பெருஞ்சுவர்! – – அரியதோர் அதிசய தகவல்
உலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகிறது. செயற்கைக்கோள் வரைபடத்திலும்,
சீனப்பெருஞ்சுவர் துல்லியமாகத் தெரிந்தது. சீனப் பெருஞ்சுவர்,உலகிலேயே பெரிய முதல் “பெருஞ்சுவர்’ ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீண்ட இந்திய “பெருஞ்சுவர்’ ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ளது. இந்தச் சுவரின் அகலம் 6 மீட்டர் ஆகும். மகாராணா கும்பா என்பவர், தமது ஆட்சி க்கு உட்பட்ட பகுதிகளைக் காப்பதற்காக, 36 கி.மீ., தூரமுள்ள மிகப் பிரமாண்டமான இந்த சுவரை கட்டினார்.
அடிப்படையில் மகாராணா கும்பா கட்டடக்கலை நிபுணர் ஆவார். மேவார் பகுதியில் உள்ள 84 கோட்டைகளில், 32 கோட்டைகள் மகா ராணா கும்பாவால் கட்டப்பட்டதாகும். ராஜஸ்தான் மாநில த்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த இந்தியப்பெருஞ்சுவரைப் பார்வை யிட்டுச் செல்கின்றனர். ஆரவல்லி மலையின் மீது ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த பெருஞ்சுவர், இந்திய அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment