
தினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
ராகி என்னும் கேழ்வரகு உருண்டையை அதிகம் உணவில் சேர்த்து சாப் பிட்டு வருவதால் நமக்கு எண்ணற்ற
ந
ன்மைகள் கிடக்கின்றன• அவை யாவன

எடையை குறைக்க உதவும்…
தொப்பையைக் குறைத்து, தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், தினமும் காலையில் ராகி உருண்டை யை சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளான ட்ரிப்டோஃபன், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.

ராகி உருண்டையில் கால்சியம் மற்றும் வைட்ட மின் D அதிகம் இருப்பதால், இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனை உட்கொண்டால், எலும்பு கள் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு…


ராகியில்லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் அமினோ ஆசிட்டுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரா லைக் கரைத்துவிடும்.
ராகியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட் கொண்டால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

ராகி உடலை ரிலாக்ஸ் அடையச்செய்யும் தன்மை கொ ண்டது. எனவே வேலைப்பளு அதிகம் நிறைந்தவர்கள், இதனை உட்கொண்டால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.

கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக் காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.
உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதி கரிக்க வேண்டுமானால், ராகி உருண்டையை சாப் பிட வேண்டும். ஏனென்றால், இதில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
மலச்சிக்கலைத் தடுக்கும்…

தைராய்டு…
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக ஹைப்
போ தைராய்டு உள்ளவர்கள், ராகி உருண்டையை உட்கொள்வது நல்லது.
புதிய தாய்மார்களுக்கு…
புதியதாய்மார்களின் உடலில்சிவப்பணுக்களின் அளவை அதிரிக்கவும், பால்சுரப்பின் அளவை அதிகரிக்கவும், ராகி உருண்டையை சாப்பிட வேண்டும்
No comments:
Post a Comment