மதுரை மத்திய தொகுதியின் திமுக வேட்பாளர் தியாகராஜன் ( முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன்) . இவர் செய்து வரும் நோட்டீஸ் பிரச்சாரத்தில் தன் குடும்ப வரலாற்றை குறிப்பிட்டுள்ளார். ஆனால், கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படம் இல்லாமல் அந்த நோட்டீசை அச்சடித்துள்ளார். இதனால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
கருணாநிதி, ஸ்டாலின் படங்களை அச்சடிக்காத தியாகராஜன், ‘மீண்டும் பி.டி.ஆர்., மதுரை மையம்’ என்ற தலைப்பில் அச்சடித்துள்ள அந்த நோட்டீஸில் அவரது தாத்தா பி.டி.ராஜன், தந்தை பழனிவேல்ராஜன், குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் குடும்ப வரலாறு, வேட்பாளர் கல்வித் தகுதி, அவர் வெளிநாடுகளில் பணியாற்றிய விவரத்தை குறிப்பிட்டு, ‘மதுரை நகரின் பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வெளிநாட்டு பணியினை கைவிட்டு திரும்பியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆனாலும், நோட்டீசில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் இல்லாததால், அதை வினியோகிக்க தி.மு.க.,வினர் முன்வரவில்லை. இதனால் வேட்பாளர் மீது கட்சியினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment