நோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ பரிசோதனைகள்!- ஆச்சரியமான அரிய தகவல்
உங்கள் உடலில் உண்டான நோய்களின் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும்
பரிசோதனைமுறை வருமாறு.
காலையிலேயே சிறுநீரை கண்ணாடி பாத்திர த்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன்பின் அது எப்படி செயல்படுகிறது என்று கவனியுங்கள்.
எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது.
முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது.
எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் கால தாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குண மாகாது.
எண்ணெய்த்துளி சிதறினாலோ அல்லது அமிழ்ந்து விட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.
இப்பரிசோதனை எளிமையான சித்த மருத்துவ மாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்க ளாகும்.
No comments:
Post a Comment