Sunday, April 10, 2016

தமிழ் விஞ்ஞானி


1. இளம் வயதில் ஜிடி நாயுடு கோவையில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார்
மும்பை பருத்தி நஷ்டம்
=======================
2. வேலையை விட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்
3. இவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமையால் திருப்பூர் லட்சாதிபதிகளில் ஒருவரானார்.
4. மும்பை சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். மும்பை பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார்.
பொள்ளாச்சி பழனி பேருந்து
==========================
5. ஆனால் மனந்தளராத ஜிடி நாயுடு ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். ஸ்டேன்ஸ் துரை, ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்தார்.
6. முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சி பழனி பேருந்தை இயக்கினார்.
7. தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்து யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார்.
9. பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றை முதன் முதலாக கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார்.
10. பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு ஒரு இயந்திரத்தை தயாரித்து பயன்படுத்தினார்.
உரிமையை இலவசமாகவே வழங்கினார்
======================================
11. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து, அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் இவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல் படுத்தப்படாமல் போனது.
12. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஓர் அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு 10லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்
13. இதற்கு நாயுடு கூறிய காரணம்: ‘ஓர் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 10லட்சம் வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு 9லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’ என்றார்.
பகிரங்க அறிக்கை
=================
14. தன்னால் கண்டுபிடிக்கப் பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக் கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும், இந்தியர்கள் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார் ஜிடி நாயுடு
15. இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.
மரக்கரியில் இயங்கிய பஸ்
=========================
16. தமிழகத்தில் பஸ் பயணம், அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார்.
ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம்.
கோவை அவினாசி ரோட்டில் ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சமூக சேவைகள்
================
17) 1938 ஆண்டு 18லட்சம் மதிப்புள்ள, தனக்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தார் இடம் இலவசமாக ஒப்படைத்தார்.
18) இளைஞர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்றளவுக்கு பொருளுதவி செய்தார்.
19) தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.
20) தன் சுயமுயற்சியினால் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அதுதான் தற்போது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை (GCT) என அறியப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...