Monday, April 25, 2016

காலகணிப்பு காலன் கணிப்போ


T K Ganesh Ram's photo.


ஜோதிடம் பிழைத்தது எப்படி ?

லாஜிக் இல்லாத கதை – விஷயம் புரிய ஏற்க தான் வேண்டும் .,
பஞ்சாங்கம் பார்த்தும்,புதிது புதிதாக வரும் ஜோதிட புத்தகங்களை படித்தும்அதிகம் பேர் ஜோதிடம் பார்க்கின்றனர் !
அவர்கள் ஆர்வம் வரவேற்க வேண்டிய ஒன்று ! தவறு இல்லை .,ஆனால் முழுமையான ஜோதிட அறிவை அவர்கள் பெற வேண்டும் !அதற்கு இந்த கதை உதவும் எனில் அதுவே நான் செய்த புண்ணியம்,
இதை ஜோதிட பால பாடமாக கூட இதை கொள்ளலாம் .,
ஜோதிடம் பொய்க்க கூடாது ? ஏன் பொய்க்கிறது ?
ஒரு ஜாதகத்தின்,நவக்கிரகங்களின் அமைவு -அதாவது “சமயம்” அல்லது “காலம்” சரியாக நிர்ணயிக்க பட வேண்டும் .,
நவக்கிரகங்கள் உச்சம் ,ஆட்சி ,நட்பு,கேந்திர கோணங்களில் இருந்தும் சரியான பலன்களை அவைகள் கொடுப்பதில்லையே ஏன்?
ஜாதகனது ஜனன காலத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருத்தல் வேண்டும் ,இல்லையெனில் உரிய பலனை தராது ,அதற்கு கிரக நிர்ணய காலம் தான் முக்கிய காரணம் .அதை 27 பிரிவுகளாக கால நிர்ணயம் செய்து கண்க்கிடபட்டுருக்கிறது .,
இது சராசரி மனிதனுக்கும் உண்டு ,இன்று எனக்கு காலநேரம் சரியில்லை ,என அன்றாட வாழ்வில் நாம் கேட்கிறோம் அல்லவா?அது இது தான் .,
அரசு உயர் அதிகாரியை -நம் காரிய வெற்றிக்கு பார்க்க போகும் போகும் நேரம் –சமயம் நல்லதாக இருக்க வேண்டும் .,அப்படியின்றி அவர் டென்சனாக இருக்கிறார் அல்லது அவர் உறங்கி கொண்டுருந்தால் நாம் அவரிடம் எப்படி நன்மை தரும் பலனை எதிர்பார்ப்பது ?.,
அது போல் நாம் ஜனனமான காலத்தில் கிரக நிலைகளின் அமைவுகளை சரி வர கவனித்து பார்த்து பலன் சொன்னால் ,அது சரியாகவே இருக்கும் ,அவ்வாறு இன்றி ,ஜோதிடர் தன் விருப்ப படி பலனை சொன்னால் சரியாய் இருக்குமா?.,
இதோ ஒரு கதையின் மூலம் விளக்கம் .,
சோழப் பேரரசில் சமஸ்தான ஜோதிடர் ஒருவர் இருந்தார் ,ஜோதிடத்தில் வல்லவரான இவர் ,ஜோதிடம் சொன்னால் ஒன்று கூட தவறாது,பலன் மிக சரியாக இருக்கும் .,அப்படிபட்ட நிபுணர் அவர் .,
அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து ,அதற்கு அவர் ஜாதகம் கணித்தார் .,
அக்குழந்தைக்கு திருமணம் ஆகி முதலிரவு அன்றே விதவை ஆவார் என பலன் கண்டார் !.பாவம் தன் குழந்தைக்கு இப்படி ஒரு குறையா என மிகவும் வருந்தினார் .,என்ன செய்வது ?
விதியை யாரால் மாற்ற முடியும் ? அல்லது அதை யாரால் அதை வெல்ல முடியும் ? என எண்ணி ஒருவாறு அமைதியானார் .,
நாட்கள் கடந்து தன் மகளது திருமண வயதை அடைந்த தன் பொண்ணுக்கு திருமணத்தை சிறப்பாக நடத்தியதோடு மட்டுமல்லாது .,தன் உற்றார் –உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தன் மகள் முதலிரவு அன்றே தன் கணவனை இழந்து பூவும் – பொட்டும் களைய நேரிடும் துர்பாக்கியமான செய்தியை கூறி ,அதற்கு வேண்டிய அனைத்தும் செய்து விட்டார் .,அனைவரும் வேதனை மிக அடைந்தனர் .,
அவர் சொல்லும் பலன் தான் தவறுவதில்லையே !
மணமக்கள் முதலிரவு காண படுக்கை அறைக்கு சென்றார்கள் !
அப்புறம் நடந்தது தான் என்ன ?
திடீரென்று மணமகனுக்கு அடி வயிறு வலிக்க ஆரம்பித்து தன் மனைவியுடம் மலஜலம் கழிக்க சென்று வருகிறேன் என சொல்லி வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றங்கரைக்கு சென்றான் .மலஜலம் கழித்து ஆற்றில் கை கால் சுத்தம் செய்யும் போது ,அந்த ஆற்றில் இருந்த ஒரு முதலை அவன் கால்களை பற்றி இழுத்து கொண்டது பாவம் ! அவன் என்ன செய்வான் .,
அவன் அந்த முதலையை பார்த்து .”ஏ “ முதலையே !
உன் பசிக்கு இரையாக தயாராக இருக்கிறேன் ,அதற்கு நான் வருந்த வில்லை ! ஆனால் ஒரு வேண்டுகோள் எனக்கு திருமணமாகி இன்று முதல் இரவு .ஏன் மனைவி என்னை எதிர் பார்த்து நான் வர வில்லை என்றால் மிகவும் வருந்துவாள் .,அதனால் நான் போய் ஒரு வார்த்தை அவளிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறேன் ,தயை கூர்ந்து என்னை விடு .,பிறகு வந்து உன் பசிக்கு இரையாகிறேன் ‘என்று கூறினான் .,
அதற்கு மனிதர்களை எப்படி நம்புவது ? சமயத்திற்கு ஏற்றார் போல் பேசி ஏமாற்றும் தன்மை உடையவர்கலாயிற்ரே நீங்கள் ! என்றது .,
மணமகனோ !என்னை நம்பு நான் வேத ஆகமம் படித்து ஒழுக்கம் தவறாதவன் கூறிய படி நான் வரவில்லை என்றால் .,
“விளக்கு அணைந்த நேரத்தில் சாப்பிடுபவன் போகும் நரகத்தில் விழுவேன் “
என்று கூறி சத்தியம் செய்தான்.,
முதலை அவன் கூறிய உறுதிமொழியை நம்பி அவனை விட்டு விட்டது .,
மணமகன் படுக்கை அறைக்கு வந்து காத்திருந்த தன மனைவியிடம் ஆற்றில் நடந்த நிகழ்ச்சிகளை கூறினான் .,
அதை கேட்ட ஜோதிடரின் பெண்ணான மணப்பெண் பெரிதும் அதிச்சியடைந்து, நீங்கள் மறுபடியும் அங்கு போகக் கூடாது என்று எவ்வளவு தடுத்தும் அதை கேட்காமல் ,தன் சொல்லை காப்பாற்ற மணமகன் அந்த முதலையை நாடி போய் விட்டான் .,
அவன் மனைவி அவன் அறியாமல் ஒரு விளக்கை மறைத்து எடுத்து கொண்டு பின்னே நடந்தாள்.,அச்சத்துடன் என்ன நடக்கும் என்பதை அறிய !
ஜோதிடரின் மாப்பிள்ளை முதலையை கூப்பிட்டு “கூறியபடி நான் வந்துவிட்டேன் “ உன் பசிக்கு என்னை இரையாக்கி கொள் ! என கூறினான் .,
முதலையும் அவனை பிடித்து உண்ண போகும் சமயத்தில் ,கரையில் நின்று கொண்டிருந்த அவன் மனைவி அந்த முதலைக்கு தெரியும் விளக்கை காட்டி உடனே அணைத்தும் விட்டாள்.,!
ஆ என்ன ஆச்சரியம் !!
முதலை அவனை உண்ண மறுத்து விட்டது .,
ஏன் என்னை விட்டு விட்டாய் ? உன் பசிக்கு என்னை இரையாக்கி கொள் ! என்றான் அவன் .,
சத்தியம் எனபது அனைவருக்கும் பொதுவானது ,உனக்கு வேறு ,எனக்கு வேறு என்பதில்லை ,நான் உன்னை சாப்பிட போகும் சமயத்தில் விளக்கு அணைந்து விட்டது .,
நீ உன் மனைவியோடு என்றும் சுகமோடு வாழ்வாயாக !என்று கூறி முதலை நீரில் மறைந்து விட்டது .,
அவனும் – அவன் மனைவியும் முதலிரவை சுகமாய் கழித்தார்கள் !
ஆனால் ஜோதிடர் தன் மாப்பிள்ளை பிணமாகி இருப்பார் என நினைத்து அவரை மயானம் கொண்டு செல்ல பாடைகட்டி தயாராக வைத்திருந்தார் .,
விடிந்து வெகு நேரமாகியும் படுக்கை அறை திறந்த பாடில்லை .,ஜோதிடருக்கு சந்தேகம் வந்து படுக்கை அறை கதவை தட்டி தன மகளை அழைத்தார் .,
கதவை திறந்து அவளும் வெளியே வந்தாள்.
பதற்றத்துடன் மாப்பிள்ளை எப்படியம்மா உள்ளார் ? என்று ஜோதிடர் கேட்டார் .,
அவள் உடனே ,தன் கணவனை எழுப்ப ,உயிரோடு எழுந்து வந்த மாப்பிள்ளையை பார்த்ததும் அதிர்ச்சிக்கு உள்ளானார் ஜோதிடர் .,
ஆஹா ஜோதிடம் பொய்த்து விட்டது .இனி ஜோதிடம் பார்ப்பதில்லை ,என்று கூறி தன் மாப்பிள்ளைக்கு கட்ட பட்டிருந்த பாடையிலேயே ஜோதிட சுவடிகளை எல்லாம் வைத்து எரித்து விட போகிறேன் என்று கூறியவாறே சுடுகாடு நோக்கி நடந்தார் ஜோதிடர் .,
சுவடிகளின் தகனத்திற்கும் ஆவன செய்து கொண்டிருந்தார் .,
மயானத்தில் திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் இருந்த சிறுவன் ஒருவன் .,
இது என்ன விந்தையாய் உள்ளது ?
ஜோதிட சுவடிகளை சுடுகாட்டில் எரிப்பதா ?எனக் கேட்க அங்குள்ளவர்கள் நடந்ததை கூறினார்கள் .,
சிறுவன் ஜோதிடரை நெருங்கி வந்து நகைத்த படி “நீர் என்ன ஜோதிடத்தில் மிக்க வல்லவரோ “ என்றான் .,
ஆம் ! ஏன் ஜோதிடம் ஒரு போதும் தவறியதில்லை ஐயம் என்ன ? என்றார் .
சரி ! உனது மகள் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் எந்த கிரகம் எந்த நிலையில் இருந்தது என்று கூற முடியுமா ? என வினா எழுப்பினான் .,அந்த சிறுவன் ஜோதிடரை பார்த்து .,
என் மகள் ஜெனன காலத்தில் அட்டமாதிபதி வியாழன் ,அட்டமத்தில் நித்திரை புரிந்த படி இருந்தார் ! என்றார் ஜோதிடர் .,
அப்படியா ? நீர் ஜோதிடத்தில் வல்லவர் தான் !
சரி ஐயா .,இக்கலியுகத்தில் தாயின் கர்ப்பத்திலிருந்து ஒரு குழந்தை உதயம் ஆகும் பொழுது லக்கினம் கணிப்பதா ?
அல்லது குழந்தை பூமியில் விழுந்ததும் லக்கினம் கணிப்பதா?
“சிறுவனே குழந்தையின் சிரசு உதயமாகும் போது தான் லக்கினம் கணிக்க வேண்டும் “ என்றார் ஜோதிடர் .,
“அப்படியானால் வியாழ பகவான் இப்போது எங்கு எப்படி இருக்கிறார் ? என்றான் சிறுவன் .,
ஜோதிடரோ அவன் கேட்ட நேரத்தை ஆருட லக்கினமாக கணித்து ,வியாழ பகவான் தன் இருப்பிடத்தை விட்டு உருமாறி பூமியில் அனாசாரம் நிறைந்த இடத்தில் எனக்கு தென் கிழக்கில் இருக்கிறார் .,என்று கூறினார் .,
சிறுவனாக வந்தவன் வியாழ (குரு ) பகவானே ஆனதால் ,இதற்கு மேல் கேட்டால் எல்லோருக்கும் தெரியும் படி தன்னை யார் என்பதை காட்டி கொடுத்து விடுவார் ஜோதிடர் என்று நினைத்து அவருக்கு மட்டும் தன சுய உருவத்தை காண்பித்து .,
உனது மகள் ஜெனன காலத்தில் சிரசு உதயம் ஆகும் போது நான் நித்திரையில் இருந்தேன் ,ஆனால் பூமியில் விழும் போது நான் விழுத்துக் கொண்டேன் .,
இக்கலியுகத்தில் ,பூமியில் குழந்தை பிறந்த (மண்ணை தொட்ட) பின் தான் லக்கினம் கணிக்க வேண்டும் ! உன் கணிதம் தவறு !நான் நித்திரையிலிருந்து
விழுத்து கொண்டதால் (ஏழாமிட பார்வை ) உனது மகளுக்கும் நவ தப்பிய தோஷம் விலகி ,உன் மாப்பிள்ளைக்கு ஒரு கண்டம் ஏற்ப்பட்டு உயிர் பிழைத்து கொண்டார் .,இனி நடந்தவைகளை உன் மகளிடம் கேட்டு தெரிந்து கொள் ! எனக்கூறி வியாழ பகவான் மறைந்து விட்டார் .,
அதன் பின்னர் ஜோதிடர் உண்மையை உணர்ந்தார் .,
ஜெனன காலத்தில் ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் என்ன சமயத்தில் இருந்ததென்று சரியாக கணிக்க பெற்றால் தான் பலன்கள் சரியாக இருக்கும் எனபது பெரியோர் வாக்கு .,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...