கெட்டிக்காரரின் பொய்யும் புரட்டும் எட்டுநாளிலே புரிந்துபோகும்! “விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா”
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியைக் கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியைக் கெடுத்தானே "பொய், புரட்டு போன்றவற்றை உண்மையால் மட்டுமே நம்மால் நிரூபிக்கவும், எதிர்க்கவும் முடியும்." என்று லெனின் கூறுகிறார்.
பொய்யிற் சிறந்தவர்கள் , உண்மையை எப்படி பொய்யாக மாற்றுவது என்பதையும் நன்கு அறிந்துள்ளனர் . அப்படி பட்ட திறமை சாலிகள் , மற்றவரின் பலவீனங்களை முன்நிரிதியும் உண்மையை இல்லாது செய்து விடுகின்றனர் ..
முழு பூசணியை கட்டுச் சோற்றுக்குள் மறைத்து காரியம் சாதிப்பவர்கள் இந்த துறை என்றில்லாமல் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முடிந்தால் பொய் சொல்லும் பழக்கத்தை கைவிடுவது நல்லது. காரணம், பொய் பிரியர்களை கண்டுபிடிக்க ‘பாலிகிராப்’ கருவியை பயன்படுத்த தொடங்கி விட்டன, சிலர் தான் தான் பெரிய இது.., என்பதை போல காட்டிக் கொள்ள ஊரெங்கும் பொய் புரட்டு கூறி திரிவது மட்டுமில்லாமல், வீட்டிலும் வெட்டி வீறாப்புடன் திரிவார்கள். இது அவர்களின் இல்வாழ்க்கையை பாதிக்கும்.
பிறர் நம்மிடம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டுமெனில் நாம் முதலில் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமல்லவா? நாம் எப்பொழுதும் பொய், புரட்டு, ஏமாற்று வேலை என்றிருந்தால் நம்மை யார் நம்புவார்கள்? நாம் என்னதான் தான தருமங்கள் செய்தாலும், உண்மை பேசவில்லை என்றால், நம் மீது என்ன மரியாதை பிறருக்கு ஏற்படும்? பிற நல்ல செயல்கள் எதுவும் செய்யாவிடிலும் ஒருவர் பொய் சொல்ல மாட்டார் என்ற நற்சான்றிதழ் பெற்றுவிட்டால் அதவிட என்ன பெருமை வேண்டும்? இதைத்தான் வள்ளுவர்
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.” என்கிறார்.
அதாவது மனத்தால் கூட பொய் சொல்லாத ஒருவன், தானமும் தவமும் செய்பவரை விட மேலானவன்
“உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்”

No comments:
Post a Comment