Thursday, April 28, 2016

திமுக தேர்தல் அறிக்கை- வாக்குறுதிக்குப் பால் ஊற்றும் வல்லவர்கள்



திமுக தற்போதைய தேர்தல் அறிக்கையில், பாலுக்கு லிட்டருக்கு ஏழு ரூபாய் நுகர்வோருக்கு குறைக்கப் போவதாக ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. 2 கோடி குடும்பங்கள் ஒரு நாளைக்கு 1 லிட்டர் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு நாளைக்கு 14 கோடி ரூபாய். மாதம் 420 கோடி ரூபாய். ஒரு வருடத்திற்கு 5040 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டி வரும். நிறைவேற்றுவார்களா? முடியுமா என்பதை சிந்தித்து பாருங்கள். ஆவின் பாலுக்கு மட்டும் என்று வைத்துக்கொண்டால் கூட, 30 லட்சம் லிட்டர்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. 30 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும்தான் 7 ரூபாய் குறைவு என்ற சலுகை கிடைக்கும். தனியார் கம்பெனி பாக்கெட் பால் வாங்கக்கூடியவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.

ஆவின் மட்டும் என்று எடுத்துக் கொண்டால் கூட 30X7= 210 லட்சம். ஒரு நாளைக்கு! ஒரு மாதத்திற்கு 210X30= 6300 லட்சம். வருடத்திற்கு 63X12= 756கோடி ரூபாய். நிச்சயமாக இதை செய்ய மாட்டார்கள். ஐந்து வருடங்களுக்குள் செய்வோம் என்றோ அல்லது சென்னை மாநகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் என்றோ மாற்றி பேச அதிகம் வாய்ப்பிருக்கிறது. கடைசியாக இந்த வாக்குறுதிக்கு பால் ஊற்றுவதுதான் நடக்கும்.
ஏற்கனவே பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று கோரி வருகிறார்கள். அவர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தினால் கூட ஒரு நாளைக்கு 60 லட்சம் ரூபாய் அரசு மானியத்தை கூட்ட வேண்டும். செய்வார்களா? இல்லை கொள்முதல் விலையை குறைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு பட்டை நாமம் சாத்தப் போகிறார்களா? மக்கள் இந்த முறை ஏமாறமாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கை `ஹீரோ அல்ல ஜீரோ என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.
------------------
இத்தகைய ஊழல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி எத்தனை காலம் ஏமாறப் போகிறீர்கள்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...