மட்டைப்பந்தாட்டத்தின் பகல் இரவு ஆட்டத்தினை நாம் மகிழ்வுடன் காணுகின்றோம் . பகலையும் இரவையும் நம்மால் ஒரே நேரத்தில் காண முடியுமா?
முடியும்;அதற்கு நாம் விண்வெளிக்குச் செல்லவேண்டும்.
நாம் விண்வெளிக்கு அனுப்பிய செய்கோள்கள் புவியின் பகலிரவு மாற்றத்தினைப் பதிவு செய்துள்ளன.அதுபோல விண்வெளிக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் புவியின் பகலிரவு மாற்றத்தினைக் கண்டு அனுபவித்து ,அற்புதமானப் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளனர்.
அப்படிப்பட்ட புகைப்படங்களில் இருந்து சில உங்கள் பார்வைக்கு.
அப்படிப்பட்ட புகைப்படங்களில் இருந்து சில உங்கள் பார்வைக்கு.
1. புகைப்படத்தில், இந்தியத்திருநாட்டின் கிழக்குப் பகுதியில் விடிந்துவிட்டது.பகற்பொழுது ஆரம்பித்து விட்டது;அனைத்தும் சூரியனின் ஒளியில் குளிக்கின்றன.இந்தியத்திருநாட்டின் நடுப்பகுதியில் விடிந்துகொண்டே இருக்கிறது.அங்கு ஒளியும் இருளும் கண்ணாம்மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றன.இந்தியத்திருநாட்டின் மேற்குப் பகுதியோ இன்னும் இருளில் மூழ்கியுள்ளது.ஆங்காங்கே மின்விளக்குகள் ஒளிவீசுகின்றன.
என்ன ஓர் அற்புதமானக் காட்சி!.புகைப்படத்தில் காணும்போதே நெஞ்செல்லாம் நிறைகிறதே!நேரில் இந்த அற்புதக் காட்சியினைக் கண்டால் எப்படியிருக்கும்?விண்வெளி வீரர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!!.
2. புகைப்படத்தில், ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பியாவிலும் இருள் நீங்க சூரியன் தன் கிரணங்களை வீசும் காட்சி.மூன்றாம் புகைப்படத்தில் ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பியாவிலும் இரவுப்பொழுது ஆரம்பிக்கும் காட்சி ஆகியவை அற்புதமாகப் பதிவாகி உள்ளன.
3. புகைப்படத்தில்,புவியின் சர்வதேசத் தேதிக் கோட்டின் மீது[[180 பாகை-கிழக்கு-பசிபிக் பெருங்கடல் ]சூரியன் உதிக்கும் காட்சி.ஐந்தாம் புகைப்படத்தில் ,அதற்கு நேர் எதிர் கிரீன்விச் கோட்டின் [0-பாகை கிழக்கு-அட்லாண்டிக் பெருங்கடல் ]நேர் சூரியன் மறையும் அற்புதக்காட்சி.
4. புகைப்படம் இந்தியத்திருநாட்டின் விடியல் காட்சி.
5. புகைப்படத்தில் வட,தென் அமெரிக்கா கண்டங்களில் இரவுப் பொழுது;மற்றையப் பகுதிகளில் பகற்பொழுது.
இப்படிப்பட்ட அற்புதப் புகைப்படங்களையும் காணொளிக் காட்சிகளயும் காண ,நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களின் இணைய தளங்களுக்குச் செல்க.
நன்றி நாசா.
No comments:
Post a Comment