Tuesday, June 7, 2016

இரட்டை அடுக்கு மேம்பாலம்



தமிழகத்தில் முதன்முறையாக கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பாலம்
தமிழகத்தில் முதன்முறையாக நெடுஞ்சாலைதுறை சார்பில் இரட்டை அடுக்கு மேல்பாலம் 'செக்மென்ட் டைப்' முறையில் சேலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது. போக்குவரத்து நெரிசலை குறைக்க 320 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் சேலம் 5வது இடத்தில் உள்ளது. 91.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட சேலத்தில் சாலை வசதிகள் இருந்தாலும், முறையாக திட்டமிடல் இல்லாததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், நெரிசலை குறைக்க சேலம் 5 ரோட்டில் மேம்பால பணிகள், 2 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் 320 கோடி ரூபாய் மதிப்பில் 5 ரோட்டில் இருந்து ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலும், 5 ரோட்டில் இருந்து குரங்குசாவடி வரையிலும் தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலம் கட்டும் பணியை முடிக்க தனியார் நிறுவனத்துக்கு 39 மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் 2 அடுக்கில் உருவாகும் இந்த பாலத்தில் 'செக்மென்ட் டைப்' பயன்படுத்தப்படுவதாகவும், தூண்கள் எழுப்பிய பின்னர் வேறு இடங்களில் தயாரிக்கப்படும் 2.5 மீட்டர் அகலமுள்ள கான்கிரீட் பீம்கள் கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...