மலேசிய தமிழர் ஒருவர் என்னிடம் கருணாநிதி இவ்வளவு வருடமாக அரசியலில் இருக்கிறார், முதல்வராகவும் பலமுறை இருந்துள்ளார் அவரது உருவ பொம்மையை எப்பவும் தமிழர்களை தவிர மற்ற மாநிலத்தவர்கள், மற்றும் இலங்கையில் சிங்களவனும் கூட யாரும் எரித்ததில்லையே என்றவர் ஆனால்
தற்போதைய முதல்வரான ஜெ வின் உருவ பொம்மைகளை மட்டுமே எரிக்கின்றார்கள் , திதி கொடுத்துள்ளார்கள், இவருக்கு மட்டும் ஏன் மற்ற மாநிலத்தவர்களிடமும், சிங்களவனிடமும் இவ்வளவு எதிர்ப்பு என்று கேட்டார்.
நான் சொன்னேன் தமிழர்களுக்காகவும் , தமிழர்கள் உரிமைகளுக்காகவும் இதுவரை கருணாநிதி மற்ற மாநிலத்திற்கு எதிராக எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை, அவர் முதல்வராக இருந்தபோதும் வெற்று அறிக்கைகளை மட்டுமே விட்டுக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி கொண்டு காலம் தள்ளிக்கொண்டிருந்தார். அவரது மகள் நடத்தும் தொழில்கள் மற்றும் பேரன்கள் நடத்தும் டிவி சேனல்கள் மற்ற மாநிலங்களில் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வார்.
ஆனால் தற்போதைய முதல்வர் ஜெ அவர்கள் தமிழர்கள் நலனுக்காகவும் , தமிழக விவசாயிகளுக்காகவும் மற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய உரிமைகளை சட்டப்போராட்டங்கள் மூலமாக பெற்றுத்தந்துள்ளார்கள்.
கர்நாடகவுக்கு எதிரான காவிரி நீர் பிரச்சினையில் காவிரியில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட வைத்தது, தண்ணீர் திறக்க நீதிமன்றம் அனுகி தமிழக உரிமைகளை பெற்றுள்ளார். அதனால் கன்னடர்களுக்கு இவரை பிடிக்காமல் அவரது உருவ பொம்மையை எரிக்கிறார்கள்,
அதுபோல் கேரளவிற்கு எதிராக முல்லை பெரியார் அணை பிரச்சினையில் 142 அடியாக தண்ணீர் தேக்கி வைக்க நீதிமன்றம் மூலம் வெற்றி கண்டதும் கேரளத்தினர் உருவ பொம்மையை எரித்தனர்.
அதுபோல் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போன்ற கடுமையான எதிர்ப்புகளை இலங்கைக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சிங்களவனும் இவருக்கு எதிராக சிங்கள அரசுக்கு சொந்தமான இணையத்தில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டனர் என்றேன்.
அப்ப கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு மட்டும் துரோகி அல்ல உலக தமிழினத்தின் துரோகி என்பதுதான் சரியாக இருக்கும் என்றார்.
உலகில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அப்படித்தான் கூறுவார்கள் என்றேன்.
நான் கூறியது சரிதானே ?
No comments:
Post a Comment