Saturday, September 3, 2016

இன்னமும் அவன் சரண் புகுந்தவனே.

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.
அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று:
இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்;

இவனைக் கீழே தள்ளி விடு என்றது.
இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்....
சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.
சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று; எனக்கு பசியாக இருக்கிறது.
நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.
வேடன் கரடியைத் தள்ளிவிட்டான்,
கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு விழாமல் தப்பி மேலே ஏறிக் கொண்டது.
அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை இப்பொழுதே தள்ளிவிடு என்றது.....
அதற்கு கரடி சொன்னது:
எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக, நான் என் தர்மத்தைக் கைவிட இயலாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...