Monday, August 5, 2019

காஷ்மீருக்கு 370 மற்றும் 35ஏ பிரிவில் இதுவரை கிடைத்த சலுகைகள்.

காஷ்மீருக்கு 370 மற்றும் 35ஏ பிரிவில் இதுவரை கிடைத்த சலுகைகள்












இயற்கை எழில் நிறைந்த ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் 1339-ல் இருந்து 1819 வரை ஷாமிர் வம்சம், முகலாயர், ஆப்கன் துரானி வம்சம் ஆகியோரால் ஆளப்பட்டது. அதன்பிறகு ரஞ்சித் சிங் என்ற சீக்கிய மன்னர் கைப்பற்றினார்.
ஆனால் 1846-ல் ஆங்கிலேயே படைகளால் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அதன்பிறகு ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜம்மு அரசர் குலாப்சிங் காஷ்மீரை பெற்று ஜம்மு-காஷ்மீரின் முதல் மன்னராக பொறுப்பேற்றார். அதை தொடர்ந்து 1947 வரை அவரது வழி தோன்றல்கள்தான் ஜம்மு- காஷ்மீரை ஆண்டு வந்தனர்.
கடைசியாக இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் மன்னர் ஹரிசிங் என்பவர் ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டு வந்தார்.
இந்தியாவில் இருந்த பல்வேறு சமஸ்தானங்கள் இந்திய ஆளுகையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.
ஆனால் ஜம்மு-காஷ்மீரை உடனடியாக இணைக்க முன்வரவில்லை. பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீரை ஆக்கிரமிக்க தொடங்கியது. இதனால் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
நாடு சுதந்திரம் அடைந்து 3 மாதங்களுக்கு பிறகு 26-10-1947 அன்று மன்னர் ஹரிசிங் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க ஒத்துக் கொண்டார். அன்றைய தினம் மன்னர் ஹரிசிங்கும், இந்திய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மறுநாள் அரசாணை வெளியிடப்பட்டது.
நேரு பிரதமராக இருந்த போது ஷேக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் ஆட்சி பொறுப்பில் இருந்தார். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் கேட்டு ஷேக் அப்துல்லா வலியுறுத்தினார். அதை நேருவும் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து அரசியல் சட்டம் 370-ல் 35ஏ உருவாக்கப்பட்டது. அந்த சிறப்பு சட்டத்துக்கு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அனுமதி அளித்தார்.
அரசியல் சட்டப்பிரிவு 368-ன்படி, அரசமைப்பில் எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றாலும் புதிதாக ஒரு பிரிவை ஏற்படுத்துவது என்றாலும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே கொண்டு வர முடியும். ஆனால் சட்டப்பிரிவு 35ஏ பாராளுமன்றத்திடமே கொண்டு வரப்படவில்லை. அதனால் அரசமைப்பு சட்டத்திற்கே எதிரானது என்ற வாதம் இன்றுவரை உள்ளது.
தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுதல் கீழ்தான் 370-வது பிரிவு வரையறுக்கப்பட்டது. ஆனாலும் 50 வருடங்களுக்கும் மேலாக இந்த சட்டத்தின் கீழ் காஷ்மீருக்கு தனியாக சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன.
மற்ற மாநில சட்டப் பேரவை அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது காஷ்மீர் சட்டப்பேரவை அதிகாரங் கள் மாறுபட்டவை. கூடுதல் அதிகாரம் கொண்டவை.
இந்த சட்டத்தின் மூலம் கிடைத்த சலுகைகள் வருமாறு:-
ராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.
ஜம்மு-காஷ்மீரில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அசையா சொத்துக்கள் வாங்க உரிமை உண்டு.
காஷ்மீர் மாநில பெண்கள் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால் அந்த பெண்களும் காஷ்மீரில் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது.
ஆனால் காஷ்மீர் மாநில ஆண்கள் வேறு மாநில பெண்களை திருமணம் செய்தால் அசையா சொத்துக்கள் வாங்கலாம்.
காஷ்மீர் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் 6 ஆண்டுகள்.
மாநில எல்லைகளை குறைக்கவோ கூட்டவோ பாராளுமன்றத்தால் முடியாது.
சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய முடியும்.
தனி கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.
அரசியல் சாசனத்தின் 238-வது பிரிவு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.
பல்வேறு மாநிலங்கள் இருக்கும் போது காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க கூடாது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறி வந்தது.
இந்த சிறப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
பின்னர் நேரு மந்திரி சபையில் மந்திரியாக இருந்த கோபாலசாமி அய்யங்காரால் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...