காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
இந்த நேரத்தில் இதே மாநிலங்களவையில் 1984 – ஆம் ஆண்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய உரையை திரும்பிப் பார்ப்பது சாலபொருத்தமாக இருக்கும்.
1984 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்கள் அவையில் காஷ்மீர் தொடர்பாக ஜெயலலிதா உரை தேசிய அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவரது தேசிய உணர்வுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகியது.
ஜெயலலிதாவின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
காஷ்மீர் மாநிலத்தில் பரூக் அப்துல்லாவின் அரசை பிரதமர் இந்திரா காந்தி டிஸ்மிஸ் செய்துள்ளார். அந்த மாநிலம் ஒரு கலவர பூமியாக உள்ளது. அங்கு முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் அதனை பரூக் அப்துல்லா எப்படி நியாயப்படுத்துகிறார் தெரியுமா? அங்கு “மத பயற்சி” அளிக்கப்படுகிறது என்கிறார்.

காஷ்மீரில் சுதந்திர தினம் கொண்டாட முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியை விளையாட முடியவில்லை.
ஆனால், பரூக் அப்துல்லா அரசு கலைக்கப்பட்டதற்காக, “ஜனநாயகம் செத்துவிட்டது” என்று ஒப்பாரி வைக்கிறது தி.மு.க.
இறுதியாக மத்திய உள்துறை அமைச்சரிடம் 2 கேள்விகளை நான் முன் வைக்கிறேன்.
1. காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுதப்படுமா?
2. இந்தியாவுடன் காஷ்மீரை ஒருங்கிணைப்பதை ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்? மேலும் இந்திய அரசியலைப்பு சட்டத்தின் கீழ் காஷ்மீரை ஏன் கொண்டுவரக்கூடாது?
இவ்வாறு ஜெயலலிதா உரை நிகழ்த்தினார்
ஜெயலலிதாவின் கனவு, 35 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நிறைவேறியுள்ளது.
No comments:
Post a Comment