காஷ்மீர் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவுடன் இல்லை.. இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்ததால் அதற்கு அதிக சலுகைகள் கொடுத்து இந்தியாவுடன் நேரு இணைத்தனர்.. அதனால் அந்த சலுகைகள் தொடரவேண்டும் - எதிர்கட்சிகள்
சரி புதுக்கோட்டை கூடதான் சுதந்திரம் அடைந்தபோது இந்தியவுடன் இல்லை புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தது.. இங்கு ஹிந்துக்கள் பெருபாண்மை அதனால் பிரச்சனை இல்லை... சலுகைகள் வேண்டாம்..
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் எங்கே வாழ்தாலும் அவர்களுக்கு சலுகைகள் கொடுப்பீர்கள்.. இது என்னங்க.. இந்தியா மதசார்பற்ற நாடு... இதுக்கு சொம்பு தூக்க மேடைக்கு மேடை சமத்துவம் பேசும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுகன்னு ஒரு டஜன் கட்சிகள்..
தனி மனிதராக இருந்தாலும் இல்லை சமஸ்தானமாக இருந்தாலும் மாற்று மதத்தவரை தேசிய நீரோட்டத்தில் இணைக்க சலுகைகள் கொடுப்போம் என்றால் அவர்கள் எங்கிருந்து தேசியவாதிகள் ஆவர்கள்.. அவர்களுக்கு எங்கிருந்து நமது தேசம் என்ற உணர்வு வரும்.. காஷ்மீரத்து நேரு நமக்கு பிரதமாரக கூட இருப்பாராம்.. காஷ்மீரத்து முப்திமுகமது சயித் ஷேக் அப்துல்லா.. உமர் அப்துல்லா நமக்கு கேபினட் அமைச்சராகி வலம் வருவார்களாம் ... ஆனால் காஷ்மீர் நமது நாடுடன் ஒருகிணைக்க பட்ட பகுதி என்றே நாம் சொல்ல வேண்டுமாம்... தனி கொடி அரசியல் அமைப்பு சட்டம் என எல்லாம் உண்டாம்... இதைவிட கேலிகூத்து என்ன இருக்க முடியும்.. இந்த அசிங்கம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரவேண்டும்...
எல்லோரும் இந்தியர்கள் எல்லோருக்கும் ஒரே நிலை ஒரே சட்டம் ஒரே சலுகை என்று வந்தால்தான் தேசப்பற்று வளரும்... அரிசி கொடுத்து அக்காள் உறவும் பருப்பு கொடுத்து தம்பி உறவும் தேவையும் இல்லை அது நிலைக்கவும் நிலைக்காது.. பொருளாதார கஷ்டபடும் எந்த இந்தியருக்கும் உதவிகள் செய்யலாம்... நான் இந்த மதத்தில் இந்த இடத்தில் பிறந்தததால் எனக்கு சலுகைகள் வேண்டும் என்பது தானே நவீன வர்ணாஸ்ரம கொள்கை. இந்த ஓட்டரசியல் சலுகைகள் ஒழிக்கப்பட்டு எல்லோரும் இந்திய மக்கள்.. எல்லோருக்கும் சமவாய்ப்பு என்ற நிலை எய்ந்தவேண்டும்..
ஜெய்ஹிந்த்..!
No comments:
Post a Comment