*பாத்திரங்களைக் கழுவும் நீரில் அவ்வப்போது கொஞ்சம் விநிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.*
*பால் பாத்திரம் தீய்ந்துவிட்டால், சிறிதளவு வெங்காயத்தை அந்தப் பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டால் தீய்ந்த கறை போய்விடும்.*
*பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கரப்பரில் தாம்பூல சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு கறுத்துப் போன வெள்ளிப்பாத்திரங்கள், பூஜை பாத்திரங்களையெல்லாம் அழுத்தித் தேய்த்தால் அவை பளிச்சென்று ஆகிவிடும்.*
*தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடா உப்பும், கொஞ்சம் அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றோடு வெள்ளிப் பொருட்களைப் போட்டு கொதிக்க விடுங்கள். ஆறியதும் துடைத்தால் வெள்ளிப் பொருட்கள் பளிச்சென்று இருக்கும்.*
*தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடா உப்பும், கொஞ்சம் அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றோடு வெள்ளிப் பொருட்களைப் போட்டு கொதிக்க விடுங்கள். ஆறியதும் துடைத்தால் வெள்ளிப் பொருட்கள் பளிச்சென்று இருக்கும்.*
*எண்ணெய்யைப் புகை கக்கும்வரை சூடேற்றி, பிறகு தெளிய வைத்து, வடிக்கட்டிக் கொள்ளவும். இதில் பலகாரம் செய்தால் காரல் வாடை இருக்காது. எண்ணெய்ப் பொங்கவும் செய்யாது.*
*எண்ணெய்ப் பலகாரங்களை டப்பாவில் நீண்ட நாட்கள் அடைத்து வைத்தால் காரல் வாடை வரும். இதைத் தடுக்க, உப்பை சிறிது துணியில் முடிந்து பலகாரங்களுடன் சேர்த்து டப்பாவில் அடைத்துவிட்டால், காரல் வாடையே இருக்காது.*
*நெற்றியில் குங்குமம் இட்ட இடத்தில் கறுப்பு மறைய துளசி இலையை, தேங்காய்ப்பால் விட்டு அரைத்து பற்றுப் போட்டால் கறுப்பு மறையும்.*
*நமத்துப்போன பிஸ்கட்டுகளை ஒன்றிரண்டாகப் பொடித்து பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் நன்றாக இருக்கும்.*
ஈருகளில் இரத்தக் கசிவு ஏற்படும்போது கடுக்காய், சீரகம், உப்பு மூன்றையும் இடித்துத் தூள் செய்து தினமும் பல் துலக்கி வந்தால் ரத்தக் கசிவு நிற்கும்.*
பெண்களுக்கு இடுப்பில் சேலை கட்டிய அடையாளம் கறுப்பாகத் தெரியும். இது எளிதில் போகாது. இந்த கறுப்பு மறையத் தினமும் கொஞ்சம் ஆலிவ் எண்ணெய்யைச் சுட வைத்து ஆறிய பின் நன்றாகத் தேய்த்துவர அடையாளம் மறைந்துவிடும்.*

*வசம்பைத் தட்டி தேங்காய் எண்ணெய்யில் ஊறப்போட்டு அந்த எண்ணெய்யை தலைக்கு தடவி வர வும்
*வேப்பம்பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சி அதை தலையில் தேய்த்து குளித்தால் பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.*
புளித்தத் தயிரை வடிக்கட்டி வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் குளிர்ச்சியைத் தரும்.*
No comments:
Post a Comment