Wednesday, August 7, 2019

அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி.

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறித்துள்ளார்......
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரையின்பேரில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்த மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு தகவல் தொழில்நுட்பத்துறையை, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அரசு கேபிள் டிவி தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த மணிகண்டன், அவரால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
இந்நிலையில், தற்போது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...