இன்று பாகிஸ்தான் பாதுகாப்பு கமிட்டியின் உயர்மட்டக்குழு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையில் கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
1. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது
2. வாகா எல்லையை மூடுவது. இந்தியாவுக்கு சென்றுவரும் பேருந்து சேவையை நிறுத்துவது.
3. இந்தியாவுடனான அனைத்து வர்த்தக, ராஜாங்க உறவுகளையும் முறித்துக் கொள்வது
4. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அதிக படைகளை குவிப்பது
5. இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிப்பது
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக உலக நாடுகள் மத்தியில் ஆதரவை கோரி ராஜதந்திர ரீதியாக தோல்வியடைந்துள்ளது பாகிஸ்தான்.
பெரும்பாலான நாடுகள் இதை இந்தியாவின் உள்விவகாரம் என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டதால் இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளில் ஆதரவு பெரிதாக கிடைக்காததால் இந்தியாவுடனான பொருளாதார, ராஜாங்க ரீதியிலான உறவுகளை துண்டித்துக்கொள்வது என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment