காஷ்மீரில் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைத்து முன்னாள் முதல்வர்களும் தங்களின் பதவிக்காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் அரசு பங்களாக்களில் வாடகை ஏதும் செலுத்தாமல் இலவசமாகவே வசித்து வருகின்றனர்.
வாழ்நாள் முழுவதும் அதே வீட்டில் வசிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் அரசு பங்களாக்களை கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்.
ஓமர் அப்துல்லாவும், மெகபூபாவும் கிட்டதட்ட தலா ரூ.50 கோடியை தங்களின் அரசு பங்களாவை சீரமைக்க அரசு பணத்தை செலவிட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெகபூபாவின் தந்தையும் முன்னாள் முதல்வருமான முப்தி முகம்மது சையது அரசு பங்களா மட்டுமல்ல நவ்கானில் உள்ள தனது தனிப்பட்ட பங்களாவையும் அரசு செலவில் பெரிய அளவிலான தொகையை செலவிட்டு சீரமைத்துள்ளார்.பாதுகாப்பு காரணங்களை கூறி ஒமர் அப்துல்லாவும், மெகபூபாவும் அரசு பங்களாக்களிலேயே தங்கி வருகின்றனர். அரசு பங்களாக்களில் வசித்து வந்தாலும், இது தவிர பரூக் அப்துல்லாவுக்கு 2 வீடுகளும், ஒமர் அப்துல்லாவிற்கு ஒரு வீடும் உள்ளது. பதவிக்காலம் முடிந்ததும் மாஜிக்கள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்தும், காஷ்மீரில் மாஜிக்கள் தொடர்ந்து அரசு பங்களாக்களில் வசித்து வந்தனர்.தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட உள்ளது. இதனால் காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும். இது அமலான பிறகு மாஜிக்கள் அரசு பங்களாக்களில் இதுநாள் வரை அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பு;இப்படி ஒரு ராஜ வாழ்க்கை பரிபோக போகுதே என்ற எண்ணத்தில்தான் இவர்கள் இந்த குதி குதிப்பது.காஷ்மீர் மக்களின் நலனிற்காக அல்ல. காஷ்மீரில் பல லட்சம் பேர் வீடு இல்லாம் வசிக்கும் நிலையில்,இவர்களின் ஒவ்வொரு பங்களாக்களும் சீரமைக்க 50 கோடி அரசு பணம் மற்றும் பாதுகாப்பு செலவு.ஒரு பங்களா சீரமைக்க 50 கோடி என்றால்?பங்களா எப்படி இருக்கும்?எப்படியாப்பட்ட இடத்தில் இருக்கும்?
காஷ்மீரின் இந்த ராஜகுடும்பங்களுக்கு,தமிழகத்தின் ராஜ குடும்பமான ஸ்டாலின் ஆதரவு.இனம் இனத்தோடுதான் சேரும்!


No comments:
Post a Comment