காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டு தெரிவித்த, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால், இரு கட்சிகள் இடையே, மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, ராஜ்சபாவில், வைகோ பேசுகையில், 'காங்கிரஸ் கட்சி தான், காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்னை இப்படி வெடிப்பதற்கே, காங்கிரஸ் தான் காரணம். நேரு, தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற, இரண்டு சொற்களுக்கும் இடம் இல்லை' என்றார்.
வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேற்று முன்தினம், கே.எஸ்.அழகிரி பேசுகையில், 'காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் செய்த முதல் குற்றம் என்னவென்று, வைகோ விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரசுக்கு எதிராக அமித்ஷாவும் பேசுகிறார். வைகோவும், அதேபோன்று பேசுகிறார். இருவருக்கும், எந்த வித்தியாசமும் கிடையாது' என்றார்.
தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ராஜ்யசபாவில், காங்கிரசை கண்டித்து, வைகோ பேசியதில் உள்நோக்கம் இருக்கிறது. வைகோ, நிதானத்தையும் பக்குவத்தையும் இழந்து விட்டார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரசையே விமர்சிக்கும் வைகோ, அரசியல் நாகரிகமற்றவர். ஏதோ ஒரு வகையில் ஆத்திரமும், காழ்ப்புணர்ச்சியும் அவருக்கு இருப்பதை, அவரது பேச்சு உணர்த்துகிறது. அவர் பேசியபோது, பிரதமர் மோடியே கை தட்டினார்; ரசித்தார். வைகோ, எதை எதிர்பார்த்தாரோ, அது நடந்து இருக்கிறது.
'என்னை பேச விடுங்கள், நான் காங்கிரசை தாக்கி பேச வேண்டும்' என, அவர் அனுமதி கேட்ட விதமும், அதை அமித்ஷா ஆமோதித்து, அனுமதி வழங்க பரிந்துரை செய்ததும், ராஜ்யசபாவில் நடந்து இருக்கிறது. வைகோவின் விமர்சனங்கள் தொடருமேயானால், கடுமையான ஏவுகணைகளை, காங்கிரஸ் கட்சி ஏவும். இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.
சென்னை, சத்தியமூர்த்தி பவனில், நேற்று ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அதன் அமைப்பாளர் செங்கம் குமார் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற, முன்னாள் தலைவர் இளங்கோவன், நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் நன்றி இல்லாத கட்சி என, வைகோ சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இன்னும், 15 நாட்கள் கூட ஆகவில்லை. நன்றி மறந்த மனிதர் என சொன்னால், அது வைகோ தான்.
வைகோவை பொறுத்தவரையில், அனாதையாக இருந்தவரை, இன்றைக்கு, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்ததன் விளைவாகத் தான், கணேசமூர்த்தியை எம்.பி.,யாக்க முடிந்தது. வைகோ தான், துரோகி நம்பர் ஒன்று என்ற நிலையில் இருக்கிறார். காங்கிரசை பற்றி அவர் பேசுவார்; ஆனால், அவரை பற்றி, நாங்கள் பேசினால் கண்டிப்பாக, அது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும். காங்கிரசை பற்றி தவறாக விமர்சனம் செய்வதை, இதோடு, அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.
இதற்கிடையில், கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ம.தி.மு.க., துணை பொதுச்செயலர், சத்யா வெளியிட்ட அறிக்கையில், 'நாகரிகத்தையும், ஜனநாயகத்தையும் பற்றி பேச, அழகிரிக்கு தார்மீக உரிமை இல்லை. ம.தி.மு.க.,வுக்கு ஆலோசனையும், அறிவுரையும் கூற வேண்டிய அவசியம் இல்லை. ராஜ்யசபாவில், 24 ஆண்டுகள் சிறப்பாக வாதிட்டு, முத்திரை பதித்தவர், வைகோ' என, கூறியுள்ளார்.

No comments:
Post a Comment