ப.சிதம்பரம் அறிவு ஜீவி, பொருளாதார மேதை - திடீர் சிதம்பரம் ஃபேன்ஸ் புகழாரம்.
அந்த அறிவு ஜீவி தமிழ்நாட்டுக்கு செய்த கெடுதல்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். அதுல ஒன்னை மட்டும் இப்ப ஞாபகப்படுத்திப்போம்.
இந்தியாவில் வேளாண் விளைபொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் திடீரென 2014 பிப்ரவரி 10ஆம் நாள் அரிசிக்கு 2.5% வரி விதித்தார் அறிவுஜீவி நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அபாரம்.
"நெல்தான் வேளாண் விளைபொருள். நெல்லில் இருந்து உமி நீக்கப்பட்ட பிறகுதான் அரிசி கிடைக்கிறது என்பதால் அதை வேளாண் விளைபொருளாக கருத முடியாது" என்றார் ப.சிதம்பரம்.
அதாவது நெல்லுக்கு வரியில்லை. ஆனால் நெல்லிருந்து உமியை எடுத்துவிட்டு அரிசியாக்கினால் வரி கொடுக்க வேண்டும்.
நெல் மட்டும் வேளாண் விளைபொருள் அதிலிருந்து கிடைக்கும் அரிசி வேளாண்விலை பொருள் கிடையாது என்பது அவர் கண்டுபிடிப்பு.
மாட்டுக்குக்கூட முழு நெல்லையும் சாப்பிட கொடுக்க முடியாது எனும்போது மனிதர்கள் எப்படி உமி எடுக்காமல் முழு நெல்லை அவித்து சாப்பிடுவது?
அரிசிக்கு வரி விதித்ததே பைத்தியக்காரத்தனம் எனும்போது அதில் இன்னொரு கத்தியையும் சேர்த்து பாய்ச்சினார் ப.சி.
இந்த வரிவிதிப்பு முன்தேதியிட்டு 2012 டிசம்பர்முதல் செலுத்த வேண்டும் என அறிவிதத்து வரியையும் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதேபோல அரிசியோடு சேர்த்து கோதுமைக்கும் வரி விதித்திருந்தால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இருந்த இடம் தெரியாமல் சூரையாடப்பட்டிருக்கும்.
அதனால்தான் தான் பிறந்த தமிழகம் உட்பட அரிசியை உணவாக சாப்பிடும் மக்களின் சாப்பாட்டில் மண் அள்ளிப்போட அரிசிக்கு மட்டும் வரி விதித்தார் சிதம்பரம்.
தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அரிசிக்கு விதிக்கப்பட்ட வரியை நீக்கினார் அறிவு ஜீவி நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

No comments:
Post a Comment