வெளிநாட்டினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமான நல்ல விசயங்கள் இருக்கின்றன. ஆனால் நாம எப்பவும் தவறானவற்றை மட்டுமே கப்புனு புடிச்சிக்கிறோம்.
உதாரணமாக, #இங்கிலாந்து நாட்டில் அனைத்திற்கும் வரிசையில் நிற்கவேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. இங்கு அமைப்பாளர்கள் வரிசையை வைத்திருக்கிறார்களோ இல்லையோ, மக்கள் தானாகவே ஒரு வரிசையை உருவாக்கி கொள்வார்கள்.
சமீபத்தில் லண்டனில் உள்ள O2 அரங்கில் #எட்_ஷீரன் இசை நிகழ்ச்சி நடத்தினர். அங்கு வந்த மக்கள், அவர்களாவே வரிசை முறையை பயன்படுத்தி நின்றிருப்பதை பாருங்கள்.
இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இங்க நாம பெட்ரோல் போட போகிற அந்த வினாடிகளில் கூட வரிசைல நிக்காம தவிர்க்கப்பாக்குறோம். சிக்னலில் சொல்ல வேண்டியதே இல்ல. இப்போ சமீப உதாரணம் அத்தி வரதர் தரிசனம். கூட்ட நெரிசல் உயிர்ப்பலி வரை போனது.
சுய ஒழுக்கமே இல்லாத மக்களாக இருக்கிறோம் நாம்.... வெட்கப்பட வேண்டிய விசயமிது.
நாம எப்போ தான் கத்துக்கப்போறோம் இது போன்ற நாகரீகமான விசயங்களை...

No comments:
Post a Comment