தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர், மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு, சக அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' தலைவருமான ராதாகிருஷ்ணனுடன் மோதியது மட்டுமல்ல; மாதம் பல நுாறு கோடி ரூபாய் புரளும், கேபிள், 'டிவி' முறைகேடுகளே காரணம் என்கிறது, ஆளுங்கட்சி வட்டாரம்.
தமிழக அரசில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்த மணிகண்டன், அப்பதவியில் இருந்து, நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். அதற்கு சற்று முன், அவர், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அளித்த பேட்டி: அரசு கேபிள், 'டிவி' துறைக்கு நான் தான் அமைச்சர். 'சேனல்' கட்டண குறைப்பு குறித்து, முதல்வர் என்னிடம் ஆலோசிக்கவில்லை. அமைச்சர் ராதாகிருஷ்ணன், தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களை, அரசு கேபிளுக்கு மாறும்படி கூறி வருகிறார்.
அவரே, இரண்டு லட்சம் இணைப்புகளுடன், 'அட்சயா கேபிள்' நிறுவனம் நடத்தி வருகிறார். 'வில்லெட்' என்ற கம்பெனி, 'செட்டாப் பாக்ஸ்' மூலம், கேபிள் இணைப்பு வழங்கி வருகிறார். மற்ற கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு முன்னுதாரணமாக, தன் அட்சயா கேபிள் விஷனில் உள்ள இணைப்புகளை, அரசு கேபிள் நிறுவனத்துக்கு, அமைச்சர் ராதாகிருஷ்ணன் மாற்ற வேண்டும். அதை செய்த பின், தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு அறிவுரை கூறலாம். இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்தே, இவரது பதவி பறிக்கப்பட்டது.
அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2007ல் ஏற்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி, 2011ல் அமைந்ததும், அதன் தலைவராக, ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். 2016ல், அவர் தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சரானார். தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்த, அரசு கேபிள் நிறுவனத்தை, அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில், மணிகண்டன் நிர்வகித்து வந்தார். முன்னாள் தலைவர் என்ற முறையில், நெளிவு சுழிவுகளை அறிந்திருந்த ராதாகிருஷ்ணனுக்கும், துறை அமைச்சர் மணிகண்டனுக்கும், அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டன. எனினும், வெளிப்படையாக மோதிக் கொள்ளாமல் இருந்தனர்.
ஏற்கனவே, கேபிள் நிறுவன தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், அதில் நடக்கும் வரவு, செலவு விவகாரம் அனைத்தும் அறிந்து வைத்திருந்தார். தீவிர முயற்சியின் பலனாக, தமிழக அரசின், கேபிள் நிறுவன தலைவர் பதவியை கைப்பற்றினார். தன் கட்டுப்பாட்டில் இருந்த, அரசு கேபிள் நிறுவனம், இன்னொரு அமைச்சருக்கு, அதுவும் தனக்கு ஒத்துழைப்பு தராமல், முரண்டு பிடித்தவருக்கு சென்றதை, மணிகண்டனால் ஏற்க முடியவில்லை. எனவே, அதை குறை சொல்லும் வகையில் பேட்டி அளித்தார்; விளைவு, அவரது பதவி பறிபோனது.

மாத மாமூல் ரூ.200 கோடி:
கட்டண சேனல்களுக்கான சந்தா, சேனல் உரிமையாளர்கள் அளிக்கும் மாதாந்திர மாமூல், தேவைப்படும்போது மிரட்டி வசூலிக்கப்படும் தொகை என, அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, சட்ட விரோதமாக வசூலாவதாக கூறப்படுகிறது. 'இதை கைப்பற்றுவதில் இருக்கும் போட்டியே, இப்போது மோதலாக வெடித்துள்ளது' என்கின்றனர், விபரமறிந்த கட்சியினர்.
அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் தொடங்கியபோது, 52 லட்சம் இணைப்புகள் இருந்தன. இப்போது வெறும், 21 லட்சம் இணைப்புகள் மட்டுமே உள்ளன. அரசு கேபிள் சார்பில், ஆப்பரேட்டர்களுக்கு மாதம், 90 ரூபாய் மட்டுமே, கமிஷன் தரப்படுகிறது. ஆனால், எஸ்.சி.வி., நிறுவனம், 130 ரூபாய்; அட்சயா சார்பில், ஒரு இணைப்புக்கு, 100 ரூபாய் கமிஷன் தரப்படுகிறது. எனவே, ஆப்பரேட்டர்கள், அரசு கேபிளை விட, மற்ற நிறுவனங்களின், 'செட்டாப் பாக்ஸ்' வாங்குவதையே விரும்புகின்றனர்.

பணம் தான் பிரதானம்:
கேபிள், 'டிவி'யில், கட்டண சேனல்கள் மற்றும் இலவச சேனல்கள் என, இரு வகைப்படுகின்றன. கட்டண சேனல்களுக்கான கட்டணத்தை, அந்தந்த சேனல்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த தொகை, அதிகமாக இருக்கும்பட்சத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் தட்டிக்கேட்க வேண்டும். 'கூடுதல் கட்டணம் நிர்ணயித்தால், மக்கள் கேள்வி கேட்பர்; குறைத்து நிர்ணயிங்கள்' என்று வற்புறுத்த வேண்டும். 'தவறினால், அரசு கேபிளில் இருந்து அகற்றி விடுவோம்' என்று, எச்சரிக்க வேண்டும்.
செய்தி சேனல்களை மிரட்டிப் பணிய வைக்கும் அரசுக்கு, பொழுதுபோக்கு சேனல்களை மிரட்டி பணிய வைப்பது, மிகவும் எளிதான காரியமே. அப்படி செய்தால், அனைத்து கட்டண சேனல்களும் வழிக்கு வந்து விடும். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை கிடைக்கும். ஆனால், தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் காரணமாக, கட்டண சேனல்களை சம்பந்தப்பட்ட, 'தலை'கள் தட்டிக் கேட்பதில்லை என்பதே, கேபிள் ஆப்பரேட்டர்களின் புகாராக உள்ளது.
கட்டண சேனல்கள் வழங்குவதாக கூறி, அரசு கேபிள், 'டிவி'யில், அதற்குரிய கட்டணம் வசூலிக்கின்றனர். உண்மையில், அந்தப் பணமும் கட்டண சேனல்களுக்கு தரப்படுவதில்லை. எதிர்த்துக் கேள்வி கேட்டால், தங்கள் சேனல், அரசு கேபிளில் இருந்து துாக்கப்பட்டு விடும் என்பதால், சேனல் உரிமையாளர்கள் அடக்கி வாசிக்கின்றனர். தவிர, குறிப்பிட்ட சேனலை, திடீர் திடீரென முன்வரிசையில் இருந்து, பின் வரிசைக்கு மாற்றுவதும், ஒரேயடியாக துாக்கி விடுவதும், பின்னர் மீண்டும் சேர்ப்பதுமாக, அரசு கேபிள் நிறுவனத்தில், ஏகப்பட்ட சித்து விளையாட்டுக்கள் நடக்கின்றன. இவை எல்லாவற்றுக்குமே, பணம் தான் பிரதானம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து பெற, அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மணிகண்டனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை. புகார் குறித்து, அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''நான் தலைமை செயலகத்தில், மீட்டிங்கில் இருக்கிறேன்,'' என்று கூறி, இணைப்பை துண்டித்து விட்டார்.

பலன் பெற்றது யார்?
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 'கேபிள் கட்டணம் குறைக்கப்படும்' என்பதுவும் ஒன்று. வெறும் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை இருந்த கேபிள் 'டிவி' கட்டணம் 'டிராய்' தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட குளறுபடியான அறிவிப்பால் 250 ரூபாய் முதல் 350 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 'இதனால் பலன் அடைந்தது தனியார் டி.டி.எச். எனும் வீடுகளுக்கு நேரடி இணைப்பு சேவை நடத்துவோரும் எம்.எஸ்.ஓ. சேவை அளிப்போரும் மட்டும் தான்' என்று கேபிள் ஆபரேட்டர்கள் புகார் கூறுகின்றனர்.
நிபந்தனைக்கு உட்பட்டது!
சில செய்தி சேனல்கள் அரசையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் வேலையை செய்கின்றன. உடனே அந்த சேனல்கள் அரசு கேபிள் 'டிவி'யில் இருந்து அகற்றப்பட்டு விடும். சம்பந்தப்பட்ட சேனல் தரப்பில் இருந்து பேச்சு நடத்த வருவர். 'நிபந்தனைகளுக்கு உட்படுவதாக இருந்தால் உங்கள் சேனல் அரசு கேபிளில் வரும்; இல்லையெனில் வராது' என்று வெளிப்படையாக கூறி விடுவர். நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே அந்த குறிப்பிட்ட சேனல் வரும் என்பது அரசு கேபிள் 'டிவி' நிறுவன செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
No comments:
Post a Comment