Friday, August 9, 2019

வேலூர் தேர்தல் முடிவு: ஸ்டாலின் அதிர்ச்சி; அ.தி.மு.க., உற்சாகம்.

ஏப்ரல் மாதம் நடந்த, லோக்சபா பொதுத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், ஓரிருவரை தவிர, அனைவரும் லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தி.மு.க., கூட்டணிக்கு, 51 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க., கூட்டணிக்கு, 18 சதவீத ஓட்டுகளே கிடைத்தன.

இதனால், தி.மு.க., வினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அடுத்து, எப்போது தேர்தல் வந்தாலும், தி.மு.க., ஆட்சி தான் என்று பெருமிதப்பட்டனர். எனவே, வேலுார் லோக்சபா தேர்தலில், நான்கு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெறலாம் என, எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல, வேலுார் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. ஆரம்பத்தில், அ.தி.மு.க., முன்னிலை பெற்றது, தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடையச் செய்தது. அதன்பின், தி.மு.க., முன்னிலை பெற்றாலும், அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்று, தி.மு.க.,வுக்கு நெருக்கடியை அளித்து வந்தது.


வேலூர் தேர்தல் முடிவு: ஸ்டாலின் அதிர்ச்சி; அ.தி.மு.க., உற்சாகம்

இறுதியில், தி.மு.க., 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், வெற்றி பெற்றது. லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தை எதிர்பார்த்தவர்கள், தற்போது, 'தலை தப்பியது' என்ற நிலையில் உள்ளனர். லோக்சபா பொதுத் தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்ததால், வேலுாரில் எளிதாக வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஸ்டாலினுக்கு, ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைந்தது, கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

லோக்சபா பொதுத் தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.,வினர் துவண்டு போயிருந்தனர். வேலுார் தேர்தலில், வெற்றி பெறாவிட்டாலும், கடும் போட்டியை கொடுத்ததும், வித்தியாசத்தை கணிசமாக குறைத்ததும், அ.தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது: லோக்சபா பொதுத் தேர்தலின் போது, கூட்டணி கட்சி தலைவர்களை, ஸ்டாலின் அரவணைத்து சென்றார். அவர்கள் அனைவரும், வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்தனர்; மகத்தான வெற்றி கிடைத்தது. ஆனால், ஸ்டாலினை சுற்றியிருந்தவர்கள், 'உங்களுடைய பிரசாரம் மற்றும் உதயநிதி பிரசாரத்தால் தான், இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது எனக்கூற, ஸ்டாலின், அதை நம்பி விட்டார். இதன் காரணமாக, வேலுார் தேர்தலுக்கு, கூட்டணி கட்சி தலைவர்களை, பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. 

வேலுார் தொகுதியை, முஸ்லிம் லீக் கேட்டும், தி.மு.க., கொடுக்கவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை, 'பிரசாரத்திற்கு வரக்கூடாது' என, தடை போட்டு விட்டனர். இதனால், அவர்களும் அதிருப்தியில் இருந்தனர். மகளிர் அணி செயலரான கனிமொழியையும், பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. எனவே, அவர் தரப்பும் ஒதுங்கிக் கொண்டது. ஸ்டாலின், உதயநிதி மட்டும் பிரசாரம் செய்தனர். 

பிரசாரத்தின் கடைசி நாளில், பெயரளவிற்கு கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்தனர். இதன் காரணமாக, கூட்டணி கட்சியினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதுவே, தி.மு.க., ஓட்டு சரிந்ததற்கு காரணம். இனிமேலாவது, ஸ்டாலின், உண்மை நிலையை உணர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...