Sunday, August 4, 2019

ஆயுள் காப்­பீட்டு பாலி­சி­க­ளுக்கு புதிய நெறி­மு­றை­கள் அறி­மு­கம்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான புதிய நெறிமுறைகளால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பாலிசிதாரர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என, கருதப்படுகிறது.


இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்­றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பாலி­சி­க­ளுக்­கான புதிய நெறி­மு­றை­களை வெளி­யிட்­டுள்­ளது. அண்­மை­யில் இந்த நெறி­மு­றை­கள் அறிவிக்கையாகவெளி­யி­டப்­பட்­டன. 


‘டெர்ம் திட்­டங்­கள், எண்­டோ­மெண்ட், யூலிப் பாலி­சி­கள், பென்­ஷன்’ திட்­டங்­கள் உள்­ளிட்­டவற்­றுக்கு இந்த நெறி­மு­றை­கள் பொருந்­தும். புதிய நெறி­மு­றை­கள் பாலி­சி­க­ளின் அம்­சங்­களில் பல்­வேறு மாற்­றங்­களை கொண்டு வரும் வகை­யில் அமைந்­துள்­ளன. இந்த மாற்­றங்­கள், பெரும்­பா­லும், பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு பலன் அளிக்­கும் வகை­யில் அமைந்­தி­ருப்­ப­தாக காப்­பீடு துறை வல்­லு­னர்­கள் கரு­து­கின்­ற­னர்.


காப்­பீடு திட்­டங்­களை புதுப்­பிக்­கும் காலம் உயர்த்­தப்­பட புதிய நெறி­முறை­கள் வழி செய்­துள்­ளது. பாலி­சிதா­ரர் பிரி­மி­யம் செலுத்த தவறி, அதற்­கான சலுகை கால­மும் முடிந்த பாலிசி காலா­வ­தி­யான பின், அதை புதுப்­பித்­துக்­கொள்ள காப்­பீடு நிறு­வ­னம் அளிக்­கும் அவ­கா­சம், புதுப்­பிக்­கும் கால­மாக அமை­கிறது.


யூலிப் வகை பாலி­சி­க­ளுக்கு இந்த அவ­கா­சம், தற்­போ­துள்ள இரண்டு ஆண்­டு­களில் இருந்து மூன்று ஆண்­டு­க­ளாக உயர்த்­தப்பட்­டுள்­ளது. யூலிப் அல்­லாத வழக்­க­மான பாலி­சி­க­ளுக்கு இந்த காலம் இரண்டு ஆண்­டில் இருந்து ஐந்து ஆண்­டாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. பாலிசி காலாவ­தி­யான மூன்று மாத காலத்­திற்­குள் காப்­பீடு நிறு­வ­னம் இது பற்றி பாலி­சி­தாரருக்கு நினை­வூட்ட வேண்­டும். 


யூலிப் திட்­டங்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச காப்­பீடு பாது­காப்பு, 10மடங்­கில் இருந்து ஏழு மடங்­காக குறைக்­கப்­பட்­டுள்­ளது.பாலி­சி­களில் சரெண்­டர் மதிப்பை பெறு­வ­தற்­கான கால­மும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. பாலி­சி­யில் இருந்து முன்­கூட்­டியே வெளி­யே­றும் போது, வழங்­கப்­படும் தொகை இவ்­வாறு குறிப்­பி­டப்­ப­டு­கிறது. 


குறிப்­பிட்ட காலத்­திற்கு பிரி­மி­யம் செலுத்­தி­யி­ருந்­தால் மட்­டுமே, பாலி­சியை ஒப்­ப­டைத்து இந்த மதிப்பை பெற முடி­யும். தற்­போது இது மூன்று ஆண்­டாக இருக்­கிறது. புதிய நெறி­மு­றை­க­ளின் படி இது இரண்டு ஆண்­டு­க­ளாக குறைக்­கப்பட்­டுள்­ளது. இரண்டு ஆண்டு பிரி­மி­யம் செலுத்­தி­னால், சரெண்­டர் மதிப்பை கோர­லாம்.


பாலி­சிக்­கான பிரி­மி­யம் தொகையை குறைத்­துக்­கொள்­ளும் வாய்ப்­பும் பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஐந்து ஆண்டு பாலிசி தொகை செலுத்­திய பின், பிரி­மி­யம் தொகையை, 50 சத­வீ­தம் வரை குறைத்­துக்­கொள்­ள­லாம். அதற்­கேற்ப காப்­பீடு பாது­காப்­பும் குறை­யும். காப்­பீடு நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், இடையே நிதி நெருக்­கடி ஏற்­பட்­டால், பிரி­மி­யம் தொகையை குறைத்­துக்­கொண்டு, பாலி­சியை தொடர இந்த மாற்­றம் வழி செய்­யும்.


பென்­ஷன் திட்­டங்­களை பொருத்­த­வரை, முதிர்வு காலத்­தில் விலக்கி கொள்­ளும் தொகை, மூன்­றில் ஒரு பகு­தி­யில் இருந்து, 60 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் மூன்­றில் ஒரு பகுதி விலக்­கல் தொகைக்கு மட்­டுமே வரிச்­ச­லுகை பொருந்­தும். முன்­கூட்­டிய விலக்கு கொள்­வ­தற்­கும் விதி­மு­றை­களில் சிறிய மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. ஐந்து ஆண்டு லாக் இன் காலத்­திற்கு பின், உயர் கல்வி, திரு­ம­ணம், மருத்­துவ தேவை போன்­ற­வற்­றுக்கு இரண்டு முறை மட்­டும், 25 சத­வீத தொகையை முன்­கூட்­டியே விலக்கி கொள்ள முடி­யும். 


இந்த புதிய நெறி­மு­றை­கள் ஆணை­யத்­தின் இணை­ய­த­ளத்­தில் அறி­விக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டு உள்­ளன. இந்த நெறி­மு­றை­களை அமல் செய்­யும் காலம் மற்­றும் வழி­முறை தொடர்­பான விப­ரங்­களை ஆணை­யம் விரை­வில் வெளி­யி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...