Tuesday, August 13, 2019

தெலுங்கில் எல்லா பாடல்களும் அருமை அருமை.

தெலுங்கு மொழியில் எத்தனை திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது.
எத்தனை பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது .
ஆனால் தெலுங்கு ரசிகர்கள் ராஜாசாரின் மீது காண்பிக்கும் அன்பும் மரியாதையும் பலமுறை நேரில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் .
இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜாசாரை பார்த்தேன் .சுற்றிலும் ரசிகர்கள் கூட்டம் .அருகே சென்று பார்த்தால் அனைவரும் தெலுங்கு பேசும் மக்கள் . அவரின் ரசிகர்கள் .
வயது வித்தியாசம் இன்றி இளைஞர்கள் இளைஞிகள் பெரியவர்கள் முதியவர்கள் என்று சுமார் ஐம்பது பேர்களுக்கு மேல் இருந்திருப்பார்கள் .
பத்து நிமிடங்கள் சின்ன சின்ன குழுக்களாக நின்று அவரின் பாடல்கள் பற்றியும் இசை பற்றியும் நெகிழ்ந்து பேசினார்கள் .
சிரித்தபடி அவர்களின் பேச்சுகளை கேட்டுக் கொண்டிருந்தார் ராஜா சார் .
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பேரன் பேத்தி எடுக்கும் வயது கொண்டவர்களும் அவரின் கால்களை தொட்டு வணங்கியது தான் .
மொழிகளை கடந்து இவரின் அன்பு ராஜ்ஜியம் இன்றும் இருக்கிறது என்பதன் நிகழ்வுகளாக இதனை நேரில் பார்த்து வியந்தேன் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...