பொதுவாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பது நமக்கு வரமா? சாபமா ? என்பது பதில் கூற முடியாத கேள்வியாகவே இருக்கிறது.. காரணம் நமது வாழ்க்கை முறையில் எவ்வளவு முன்னேற்றம் உள்ளதோ அதே அளவு நமது ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுக் கொன்டு தான் இருக்கிறது...
இன்றைய காலகட்டத்தில் செல்போன் எப்படி தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதோ ! அதே போல headphones அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது..headphone பயன்படுத்தாமல் பயனம் செய்வது முடியவே முடியாது என்ற மனநிலையில் வாழ பழகிவிட்டோம்...
நாம் செய்வது சரிதான என்ற கேள்விக்கு அறிவியல் வல்லுனர்கள் கூறும் பதிலை கவனியுங்கள்..
1. காது உணர்வின்மை:
தொடர்ந்து HEADPHONES -ஐ நீன்ட நேரம் உபயோகிக்கும் போது உங்கள் காதுகளில் உணர்வின்மை பிரச்சனையை உண்டுபண்ணும்..அது மட்டுமில்லாமல் காதுக்குள் உண்டாகிற இரைச்சல் பிரச்சனையால் EAR DRUM பாதிக்கப்பட்டு SENOSORY NEURAL HEARING LOSS என்கிற காது கேளாமை பிரச்சினையை ஏற்படுத்தும்.
2. காது வலி:
நீண்ட நேரம் headphones பயன்படுத்துவதால் காதுகளில் கடுமையான வலியை உண்டாக்கும் , காதுகள் மட்டுமின்றி சுற்றியுள்ள உறுப்புகளுக்கும் இந்த வலி பரவும்..
3. மூளையில் எதிர்மறை விளைவுகள்:
காதுகளில் உட்பகுதி மூளையுடன் தொடர்பு கொண்டவை.. HEADPHONES பயன்படுத்துவதால் இதில் இருந்து வரும் சில மின்காந்த அலைகள் மூளையில் மோசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி மூளையின் ஆற்றலை குறைப்பது மட்டுமல்லாமல் மூளை புற்றுநோய் வரவும் வழிவகுக்கும்..
4. மனநோய் பிரச்சனை:
தொடர்ந்து HEADPHONES -ஐ பயன்படுத்தும்போது உங்கள் சிந்திக்கும் திறன் , ஞாபக சக்தி குறையும். அதிகமாக பயன்படுத்தினால் "AUDITORY HALLUCINATION " என்ற மனநோய் பிரச்சனை ஏற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்..
5. அதிகமான விபத்துகள்:
HEADPHONES அதிகமாக பயன்படுத்திக்கொண்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் தான் அதிகமான விபத்துக்களை சந்திப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது...
6. தொற்றுநோய் பிரச்சனை:
இப்போதுள்ள அனைத்து HEADPHONES-களுமே உங்கள் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படியே வடிவமைக்கப்பட்டது இதனால் உங்கள் காது சவ்வுகளுக்கு நெருக்கமாக இருக்கும்... அதனால் காதுக்குள் செல்ல வேண்டிய காற்றை நீங்கள் தடுப்பதால் காது சவ்வு பிரச்சனை மற்றும் பல விதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது...
எனவே HEADPHONES பயன்பாட்டை குறைப்பது மிகவும் நல்லது... அப்படி HEADPHONE பயன்பாட்டை குறைக்க முடியாதவர்கள் பயன்படுத்தும் நேரத்தையும் ஒலியின் அளவையும் குறைத்து பயன்படுத்தி பெரிய அளவிலான பிரச்சனை வராமல் தடுக்க முயற்சி செய்வோம்.
No comments:
Post a Comment