Friday, August 2, 2019

Very correct.People are greedy,very difficult to satisfy them.

அது, 2006ம் வருடம் தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் நேரம், -
திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் -.
அதில், அனைவருக்கும் கலர் டிவி, இரண்டு ஏக்கர் இலவச நிலம் போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார் -
அதுநாள் வரை, தமிழகத்திற்கு இருந்த மொத்த கடன் 57 ஆயிரம் கோடிகள் மட்டுமே -
அப்பொழுதே, பாரத குடியரசுத் தலைவர் திரு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு இது குறித்து நான் கடிதம் எழுதினேன் -
தேர்தல் என்றாலே, அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும், மக்கள், நீதியரசர் களாக இருந்து, அவர்கள் செய்த நல்லது கெட்டது போன்றவைகளுக்கு தீர்ப்பளிக்கும் நாள் என்று அர்த்தம் -
ஒரு நீதிபதியைப் பார்த்து, நீங்கள் எனக்கு சாதகமான தீர்ப்பு அளித்தால், நான் உங்களுக்கு இந்த சன்மானத்தை அளிப்பேன் -
என்று கூறுவது போலத் தான் இலவச அறிவிப்புகளும் இருத்தன.
ஆனால், கேடுகெட்ட கருணாநிதி தொடங்கி வைத்த இந்த இலவச போதை ,இன்று இந்திய அரசியலை மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைக்கப்போகிறது -
2006இல் தமிழகத்தின் மொத்த கடன் தொகை வெறும் 57 ஆயிரம் கோடிகள் என்றால்
இன்றோ - கிட்டத்தட்ட 5 லட்சம் கோடிகள் -
2006இல் கருணாநிதி பெற்ற வெற்றியைப் பார்த்த, ஜெயலலிதா அதற்குப் பின்வந்த 2011 தேர்தலில் எண்ணற்ற இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசினார் -
அதன் விளைவு தான், இன்று நாம் அனுபவிக்கும் கடன் சுமை -
இதை இன்னும் எளிமையாக விளக்க வேண்டுமென்றால் -
நான்கு பேர் சேர்ந்து, ஒரு உணவகத்திற்கு செல்கிறோம்- நால்வரும் சேர்த்து ஒரு ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிடுவோம் -
அதில் யாராவது ஒருவர் மட்டும் பில் தொகையை செலுத்தினால் அது மற்றவர்களுக்கு இலவசம் - ஆனால் ஒருவர் மட்டும் செலவழித்தது ஆயிரம் ரூபாய் -
இது போன்று தான், இலவசங்களும்- இங்கே யாரோ சிலருக்கு, பயன் இருக்கிறதோ இல்லையோ, நம்முடைய வரிப்பணத்தை செலவு செய்து தான் இலவசம் -
இதன் சுமையை நாம் அனைவரும் தான் சுமக்க வேண்டும் -
நம்முடைய வரிப்பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் நீண்டகால பலன் இருக்கும் -
ஆனால் இலவசத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் - அது நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் -
தான் முதலமைச்சராக இருந்த குஜராத்தில் கூட ,இலவசமாக ஒரு யூனிட் மின்சாரம் கூட தர மாட்டேன்- ஆனால் தடையற்ற மின்சாரம் 24 மணி நேரமும் வழங்குவேன் என்று கூறி ஆட்சி செய்த ஆட்சி செய்த நரேந்திர மோடி -
பசியோடு இருப்பவனுக்கு, ஒரு மீன் துண்டை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பேன் என்று செயல்பட்டார் -
ஆனால், இலவசங்களை வாங்கி வாங்கி பழக்கப்பட்டுவிட்ட நம் மக்கள், இன்று நமது ஜனநாயக கடமை வாக்களிப்பதற்கு கூட கூலி கேட்கிறார்கள் -
கோடிகளை கொள்ளையடித்த கட்சிகளும், வாக்குக்காக நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவதுபோல 500 ரூபாய்களையும், பல ஆயிரங்களையும் அள்ளி இறைக்கிறார்கள் -
தன்னுடைய மாநிலத்திலேயே, இலவசங்களை நிறுத்த, ஒரு மனிதர் எப்படி இலவசமாக 15 லட்சம் தருகிறேன் என்று வாக்குறுதி அளிப்பார் என்று கூட சிந்திக்காத ஒரு முட்டாள் கூட்டம் -
இன்று ராகுல் மாதம் தோறும் 6000 ரூபாய் தருகிறேன் என்று கூறியதை நம்பிக்கொண்டு திரிகிறது -
அவ்வாறு கொடுக்க இயலுமா? கொடுத்தால், இந்த நாடு என்ன ஆகும் என்றுகூட சிந்திக்க மறுக்கிறார்கள் -
ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டம் என்று கூறி பல லட்சம் கோடிகளை கடலில் கொட்டியது போல் வீணாக்கி விட்டனர் இந்த காங்கிரஸார் -
அதன் பலனாக இன்று விவசாய வேலைக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் திணறும் நிலை விவசாயிகளுக்கு -
மீண்டும் இதுபோன்ற வாக்குறுதிகளால், மிகப்பெரிய மக்கள் சக்தி கொண்ட பாரத நாடு, மிகப்பெரிய பிச்சைக்காரர்களை கொண்ட தேசமாக மாறும் -
பொருளாதாரம் என்பது பண்டமாற்று போலத்தான்- நீ அரிசியை கொடுத்தால் நான் கோதுமை தருவேன் என்பது போலத்தான் -
ஒரு பக்கம் மட்டுமே உற்பத்தி- மற்றொரு பக்கம் அது இலவசம் என்றால்- பொருளாதாரம் வீணாகிப் போய் விடும் -
உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட பாரத நாடு -
அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு, சோமாலியாவில் போல பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் -
தயவுசெய்து இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளை ஆதரிக்காதீர்கள் -
ஓட்டுக்கு காசு தரும் கட்சிகளை நம்பாதீர்கள் -
தேசப்பணியில் என்றும் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...