Friday, August 2, 2019

பேசுவதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருக்கிறது இங்கே.

கடந்த இரு தினங்களாக வைரலாகப் பேசப்படும் பேசுபொருள் #ZOMATOதொழில்துறையில், சாதிக்க நினைத்து அல்லது சாதித்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற நிறுவனங்களை வியாபார ரீதியாக சவாலை எதிர்கொள்ள முடியாத நிறுவனங்கள் இதுபோல வியாபார இலாபங்களை கெடுக்கும் நோக்கிலும், அவப்பெயரை ஏற்ப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதென்பது புதிதான விசயமல்ல.ஆனால் அதையெல்லாம் ஒரு பேசு பொருளாய் வாரிச் சுருட்டிக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் ஒரு சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் தொடர்புடைய அந்த நிறுவனம் அதற்கான விளக்கத்தையும், சட்ட ரீதியான சந்திப்புக்களையும் கட்டாயம் எதிர்கொள்ளும். நம்மால் முடிந்தது இதுபோன்ற விசயங்களை ஊதிப் பெரிதாக்காமல் கடந்துச் செல்வதே. தொழில்துறையில் போட்டிகளையும், சவால்களையும் எதிர்கொள்ள முடியாத எவரோ கட்டமைப்பு செய்த காணொளி தான் அது.ஒரு நிறுவனத்தின் முதலீடுகளை கெடுக்க வேண்டும்,முதலாளியை அவமரியாதை செய்ய வேண்டும், பங்குகளை சரிவில் கொண்டு செல்ல வேண்டுமென்று யாரோ செயல்படுத்தியிருக்கும் இது போன்ற விஷக் கிருமி வேலைகளுக்கு நமது நேரத்தை வீணடித்து விளம்பரம் செய்ய வேண்டாம்.
ஒரு தொழிலை உருவாக்கவும், நடைமுறைப்படுத்தவும் தொழில் வல்லுநர்கள் பெரிதும் மெனக்கெட்டு ஒவ்வொன்றாய் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவன் அணிந்திருந்த சட்டை அந்த நிறுவனத்திற்கு உரியது என்ற ஒரு காரணத்தை வைத்து மட்டும் அந்நிறுவன ஊழியர்களை விமர்சனம் செய்யாதிருங்கள். நாள் முழுதும் அலைந்து திரிந்து
அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை வழி நடத்தும் ஆண்கள் பலரும் இருக்கிறார்கள். இவையெல்லாம் அப்படி உழைக்கும் பலருக்கும் மன உலைச்சலைத் தரும். பகுதிநேர வேலையாக நம் வீட்டுப் பெண்களோ, நமக்குப் பழக்கமான சில பெண்களோ அங்கு பணியாற்றத் துவங்கியிருக்கிறார்கள் இவையெல்லாம் அவர்களை மனதளவில் தோய்வு நிலையையும் ,தோல்வியையும் ஏற்ப்படுத்தும்.
உணர்ந்து பேசுங்கள்.உண்மையென தெரியாததை பேசாதிருங்கள்.
இது ஒரு முதலாளியை முடித்துக் கட்ட
வேண்டி செய்த செயலாகக் கூட இருக்கலாம். வரம்பு மீறி வார்த்தைகளைக் கொட்டி வாய்க்கொழுப்பை வெளிக்காட்டாதிருங்கள்.
நியாயம் எதுவோ, அதைக் காலம் உணர்த்தும். நீங்கள் வீடியோ,வீடியோவென ஆர்வமாய் தேடிக் கொண்டிருக்கும் வீடியோக்களில் ஒன்றும் இல்லை அம்மணமாய் கிடக்கிறார்கள் அவ்வளவே.
தனிமனித ஒழுக்கம் மறந்து அப்படி கிடக்கும் அவர்களுக்கும் அந்த வீடியோவில் கிடப்பவர்களை ரசிக்கத் துடிக்கும் பலருக்கும் வித்தியாசமில்லை.
எந்த மிருகமும் ஒருவரையொருவர் புணர்வதை வேடிக்கை பார்க்க நினைப்பதில்லை.மனிதன் மட்டும் தான் மிருகங்களையும், மிருகத்தனமாக மனிதர்களையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறான்.
உங்களால் நல்லது செய்ய முடியுமென்றால் கண்ணில் காணாத எதையும் நம்பாதிருங்கள். காணொளியில் காணும் எல்லாவுமே நிஜமாகத் தோன்ற ஆரம்பித்து விட்டால். இன்று யாரோ ஒரு நிறுவனத்திற்கு நடந்தது நாளை நமக்காகவும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நடக்கலாம். பேசுவதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருக்கிறது இங்கே. அதை விடுத்து அடுத்தவர் பெட்ரூம்யில் ஆய்வு செய்ய அவசியமில்லை. கலைத்துப் போட்டால் நிர்வாணம். உடுத்தியிருந்தால் ஆடை அவ்வளவு தான் வாழ்வியல் முறை டாட்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...