Wednesday, April 8, 2020

‘மகன் வந்ததை மறைத்தார் பல்லவி ஜெயின்’

மத்தியப்பிரதேச மாநில சுகாதாரத்துறையின் முதன்மை செயலராக பணியாற்றுபவர் பல்லவி ஜெயின்.
இவருடைய தலைமையில்தான் அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதில், சுகாதார துறையின் கூடுதல் இயக்குநர் டாக்டர் வீரேந்திரகுமார் சின்ஹாவும் பணியாற்றுகிறார். இவ்விருவருக்கும்… தற்போது கொரோனா நோய் தொற்றியுள்ளது..!
இவர்கள் மூலம், தினம் தினம் இவர்கள் போட்ட கொரோனா தடுப்பு திட்ட வியூக மீட்டிங்கில் கலந்துகொண்ட 18 சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்றியுள்ளது, சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருவருடைய மகன்களும் சென்ற மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். அவர்கள் இருக்கும் அதே வீட்டில்தான் மேற்படி சுகாதாரத்துறை அதிகாரிகளும் உள்ளனர். தனியறையில் தனிமைப்படுத்தல் எனும் நடைமுறையை இவர்களே இவர்களில் வீட்டில் சரியாக பின்பற்றவில்லை.
அமெரிக்கவில் இருந்து மகன் திரும்பியதையடுத்து, பல்லவி ஜெயின் வீட்டில் குவாரண்டைன் போஸ்டர் கூட ஒட்டப்படவில்லை. இப்போதுதான் ஒட்டப்பட்டுள்ளது..!
ஆகவே, ‘மகன் வந்ததை மறைத்தார் பல்லவி ஜெயின்’ என்கிற குற்றச்சாட்டுக்கு அவர் இலக்காகியுள்ளார்.
இந் நிலையில், இப்போது அவரே கொரோனா பாசிட்டிவ்.
நமது மாநில சுகாதாரத்துறை செயலாளர் ப்யூலா ராஜேஷ் போன்றே, தினமும் செய்தியாளர்களை சந்தித்து வந்தார், மபி சுகாரத்துறை செயலாளர் பல்லவி ஜெயின் என்பதால்… இவருடன் பல கூட்டங்களில் கலந்துகொண்ட பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இப்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள். டெஸ்ட் கொடுத்துள்ளனர். அவர்களில் பல்லவி ஜெயினின் பிஏ உட்பட இதுவரை 18 அதிகாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 10 அல்லது 15 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
பொது மக்களை எல்லாம் எச்சரிக்கை யுடன் இருங்கள் என்று எச்சரித்த அதிகாரிகளே எச்சரிக்கை யாக இருக்கவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்...
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்...
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...