தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வரும், 20 முதல் செயல்பட அளிக்கப்பட்டுள்ள அனுமதியை, திரும்பப் பெற வேண்டும்' என, தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பு தலைவர், பரிமளா அறிக்கை:நாடு முழுவதும், மே, 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும், 20 முதல், ஐ.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட, மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பணியாளர்கள் அனைவருக்கும், வாகன வசதி செய்து கொடுக்கவில்லை. பணியாளர்களில், 80 சதவீதம் பேர், பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் தான் வந்து செல்கின்றனர்.
ஆனால், வாகனங்கள் இயங்காத நிலையில், பணிக்கு செல்வது சிரமமாக இருக்கும். மேலும், அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன. இது, கொரோனா நோய் பரவலுக்கு, வாய்ப்பாக அமையும். தற்போது, ஊரடங்கு காரணமாக, பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணிபுரிகின்றனர். எனவே, 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை, அரசு திரும்ப பெற வேண்டும். தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும், மாத ஊதியம் வழங்குவதை, அரசு உறுதிப்படுத்த வேண்டும்; ஆட்குறைப்பை கைவிட, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment