Monday, April 13, 2020

சமூக வலை தளங்களில் இந்த படம் நந்திக்கே மாஸ்க் என்று கேலியாக எழுதப்பட்டு வருகின்றது.. உண்மை அதுவல்ல.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரம்மராம்பிகா ஸமேத ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் வீரசைவ காரணாகம முறைப்படியே பூஜைகள் நடந்து வருகிறது. இத்திருக்கோயில் வீரசைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதன் படி நந்தி வ்ருத கல்பத்தில் அடிப்படையில் இங்கு மஹா நந்திக்கு நித்ய நைவேத்யம் கிடையாது.
செவ்வாய்க்கிழமை, ப்ரதோஷ தினம் மற்றும் மஹா சிவராத்ரி, ப்ரஹம்மோற்சவ விழா காலங்களில் மட்டுமே இந்த மஹா நந்திக்கு ஊரவைத்த மூக்கடலையை ஒரு துணியுடன் சேர்த்து வாயோடு கட்டுவது காலம் காலமாக நடந்து வரும் ஐதீகங்களில் ஒன்று.
திருமணமாகி புத்ரபாக்கியம் இல்லாதவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்களால் இந்த சன்னா எனும் மூக்கடலையை வாங்கி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். பின் நந்தி வ்ருத கல்ப முறையில் நைவேத்யம் செய்யப்பட்டு ப்ரஸாதமாக வழங்கப்படும்.
ஸர்வம் ஸ்ரீ சிவார்ப்பணம்
சம்போமஹாதேவா.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...