Monday, April 13, 2020

*சித்திரை தமிழ் வருடப்பிறப்பு*

*காலை தரிசனம் !*
*சித்திரை சிறப்பு தரிசனம்*
மீனாட்சி பஞ்சரத்தினத்திலிருந்து ,
உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் கேயூர ஹாரோஸ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்
உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம்- ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்
கேயூர ஹாரோஸ்வலாம் - வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும்
பிம்போஷ்டீம் - கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும்
ஸ்மித தங்க்த பங்க்தி ருசிராம் - புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும்
பீதாம்பராலங்க்ருதாம் - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் - திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்
தத்வ ஸ்வரூபாம் - உண்மைப் பொருளானவளும்
சிவாம் - மங்கள வடிவானவளும்
காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்
நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன் ,
- ஜெகத்குரு ஆதிசங்கரர்
இன்று
*சித்திரை தமிழ் வருடப்பிறப்பு*
செவ்வாய்கிழமை!!
சார்வரி வருடம் :
சித்திரை மாதம்!
01 ஆம் தேதி !
ஏப்ரல் மாதம் :
14 ஆம் தேதி !!
(14-04-2020)
சூரிய உதயம் :
காலை 06-04 மணி அளவில் !!
இன்றைய திதி :
இன்று இரவு 09.58 வரை சப்தமி பின்பு அஷ்டமி !
இன்றைய நட்சத்திரம் :
இன்று அதிகாலை 00.34 வரை மூலம் பின்பு பூராடம் !
யோகம் :
இன்று அதிகாலை 00.34 வரை அமிர்தயோகம் !
பின்பு சித்தயோகம் !!
இன்று
கீழ் நோக்கு நாள் !!
நல்ல நேரம் :
காலை : 07.30 மணி முதல் 08-30 மணி வரை !
மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை!!
சந்திராஷ்டமம் : ரோஹிணி ! மிருகசிரிஷம்!!
ராகுகாலம் :
பிற்பகல் : 03.00 மணி முதல் 04-30 மணி வரை !
எமகண்டம்
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!
குளிகை :
பிற்பகல் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !
சூலம் : வடக்கு !
பரிகாரம்: பால் !
* இன்று சித்திரை புத்தாண்டு தினத்தில் என்ன என்ன செய்ய வேண்டும்.!?*💐🌷🌹
* இன்று பிறக்கப் போகும் புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்.*
என்ற முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவு உறக்கத்திற்கு செல்வதற்கு முன்பு. ஒரு பெரிய அல்லது ஓரளவான கண்ணாடியை எடுத்து கிழக்குபார்க்கும் வகையில் வைத்துவிடுங்கள்.
அதன்பின் வீட்டில் இருக்கும் நகை ஏதேனும் ஒன்றை அல்லது நகைகளை வெள்ளி, பணம், பழங்கள், புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் இனிப்பு வகைகள் போன்றவற்றை கண்ணாடியின் முன் வைத்துவிட்டு உறங்குங்கள். இது சாமி அறையில் வைப்பது சிறப்பு..
*காலை எழுந்திருக்கும் போது (அதாவது 4 to 6.30 am க்குள் எழுந்திருக்க வேண்டும்.)*
*எழுந்ததும் நேராக சென்று கண்ணாடியில் விழிக்க வேண்டும்.*
இது இன்றளவும் பலர் செய்துகொண்டிருந்தாலும் தெரியாதவர்களுக்காக இவை.
இதனால் அன்றைய நாள் முழுவதும் நல்ல விடயங்களை பார்க்கலாம்
அதனால் பிறக்கும் வருடம் சிறப்பாக இருக்கும். இதனை பார்த்த பின் உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை உச்சரித்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் குளித்துவிட்டு 4.30 முதல் 6.30க்குள் பூஜை அறையில் விளக்கேற்றிவிட வேண்டும்.
அடுத்து உங்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரலாம்.
அடுத்து உப்பு, பருப்பு போன்ற பொருட்களை வீட்டிற்கு வாங்கலாம்.
என்ன விடயங்களை நாளை தானம் கொடுத்தால் என்ன பயன் என பார்க்கலாம்.
நாளைய தினம் புத்தாடைகள் குறிப்பாக சிவப்பு , பச்சை, மஞ்சள் , நிறத்திலான ஆடைகளை தானமாக கொடுத்தால் மற்றும் குங்குமம் கணவனின் ஆயுள் நீடிக்கும். அடுத்து உணவுகளை தானம் கொடுக்கலாம்.
நீங்கள் உண்ணும் விதமான உணவுகளையே தச்ன்ச்ம் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக நீங்கள் சம்பா, அல்லது வேறேனும் அரிசி வகைகள் சமைத்தால் அதனையே சமைத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கலாம்.
நாளைய தினம் எதற்காககவும் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அதே போல் இரவல் பொருள் கேட்காதீர்கள்.🌹🤝🙏
*தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
*அடியேன்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...