Saturday, April 11, 2020

தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ்.

தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ்
கே.பி.ராமலிங்கம்


















தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பான விஷயத்தில், கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டது.

இதற்கிடையே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ம் தேதி தெரிவித்திருந்தார்.
 
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...