சார்வரி ஆண்டின் ராஜா புதன். புதனின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை போற்றும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. இதை படித்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.
* பாற்கடலில் சயன கோலத்தில் இருப்பவரே! பாம்பணையில் துயில்பவரே! காண்பவர் மயங்கும் பேரழகு மிக்கவரே! நாராயண மூர்த்தியே! அச்சுதனே! தாமரைக் கண்களைக் கொண்டவரே! மூவுலகையும் காத்தருள்பவரே! லட்சுமி வசிக்கும் திருமார்பைக் கொண்டவரே! உன் பாதம் பணிந்தோம். எங்களுக்கு செல்வ வளம் தந்தருள்வீராக.
* பிரம்மாவாலும், தேவர்களாலும் வணங்கப்படும் தாமரைப் பாதங்களைக் கொண்டவரே! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவரே! பிரகாசம் மிக்க சக்ராயுதத்தை தாங்கியவரே! கருணைக்கடலே! புண்ணிய மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! எங்களுக்கு ஆரோக்கியம் மிக்க நல்வாழ்வு அளிக்க வேண்டும்.
* பத்மநாபரே! கருணைப் பார்வையால் வேண்டும் வரம் தருபவரே! மகாவிஷ்ணுவே! முகுந்தனே! முராரி கிருஷ்ணா! கோபாலா! கோவிந்தா! வாசுதேவா! மங்களகரமான சரீரத்தைக் கொண்டவரே! திருமகளின் மனம் கவர்ந்தவரே! ஆதிசேஷன் மீது துயில்பவரே! எங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலைக்க அருள்புரிய வேண்டும்.
* பக்தரைக் காப்பவரே! உயிர்களை சம்சாரக் கடலில் இருந்து காப்பவரே! ஆதிமூலமே என அழைத்த யானையின் இடர் தீர்த்தவரே! சாதுக்களின் உளத்தில் வாழ்பவரே! பட்டு பீதாம்பரதாரியே! ரங்கராஜரே! உம் அருட்பார்வையை எங்கள் மீது காட்டியருள வேண்டும்.
* இந்திர நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவரே! ஸ்ரீரங்கத்தின் காவலரே! ஏழுமலை மீது குடிகொண்டவரே! மதுசூதனரே! கல்யாண குணங்கள் பெற்றவரே! இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.

உழைப்பால் உயர்ந்திடுங்கள் :வழிகாட்டுகிறார் வாரியார்
* வாழ்வில் உயர வேண்டுமானால் தேனீ போல உழைக்க தயாராகுங்கள். சுறுசுறுப்புடன் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* சிரித்த முகம், நேர் கொண்ட பார்வையுடன் நடை போடுங்கள். இனிமை, நன்மை தரும் சொற்களையே பேசுங்கள். * இளகிய தங்கத்தில் ரத்தினம் ஒட்டிக் கொள்வதைப் போல, மனம் பக்தியில் ஒன்றினால் கடவுள் அருள் கிடைக்கும்.
* குடும்பம் என்னும் மரத்தில் மனைவி வேராகவும், கணவன் அடிமரமாகவும் இருக்க வேண்டும். அதில் அன்பு என்னும் இலைகள் வளர்ந்து, ஒற்றுமை என்னும் கனியைப் பறிக்க வேண்டும்.
* கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கி எரியும் தீ போல, எந்த சூழலிலும் உயர்ந்த சிந்தனை கொண்டவராக இருங்கள்.
* சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். வளைந்து நிமிர்ந்து வேலை செய்தால், உடல் பலத்தோடு அறிவுத் தெளிவும் உண்டாகும்.
* நல்லவர்களைத் தேடிச் சென்று பழகுங்கள். அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கடைபிடியுங்கள்.
* குடும்பத்தினர் ஒன்றாக கூடி தினமும் கடவுளை வழிபடுவதால் எல்லாவித நன்மையும் கிடைக்கும்.
* ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை. பக்தியோடு கொடுக்கும் எளிமையான பூவும், நீருமே போதுமானது.
நாளெல்லாம் நல்ல நாளே :வாழ்த்துகிறார் சிவானந்தர்
* தினமும் காலையில் எழுந்து தியானம் செய்யுங்கள். வாழ்வின் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருக்கும்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தானம் கொடுங்கள். எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள்.
* தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும் மவுனத்தையும் கடைபிடியுங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். தேவைக்கு மட்டுமே பேசுவது நல்ல குணமாகும்.
* அன்றாட செயல்களைத் திட்டமிட்டு பணியாற்றுங்கள். தவறாமல் நாட்குறிப்பு எழுத மறக்காதீர்கள்.
* எளிய வாழ்க்கையும், உயரிய சிந்தனையும் வாழ்வின் லட்சியமாக இருக்கட்டும்.
* காலையில் கண் விழித்த போதும், இரவில் படுக்கச் செல்லும் போதும் கடவுளை மனம் ஒன்றி பிரார்த்தனை செய்யுங்கள்.
* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள். பிறருக்கு தொண்டு செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சத்துள்ள எளிதில் செரிக்கும் உணவு வகைகளை மட்டும் உண்ணுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் செல்லுங்கள். தினமும் கடவுளின் திருநாமத்தை ஜபிக்கத் தவறாதீர்கள்.
* தன்னலத்தை மறந்து உலகமே நம் குடும்பம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் செயலாற்றுங்கள்.
பச்சடி பரிமாறும் முன்
ஒருமுறை காஞ்சிப்பெரியவர் புத்தாண்டன்று உணவில் இடம் பெறும் வேப்பம்பூ பச்சடி பரிமாறுவது குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.
“ வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகிய ஐந்தும் பச்சடியில் இடம் பெற வேண்டும். பேருக்கு கொஞ்சமாக வைக்காமல், அதிகமாக செய்வது அவசியம். முதலில் அம்பிகைக்கு ஒரு கிண்ணம் நிறைய வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். அப்போது என்ன கோரிக்கை வைத்தாலும் அவள் நிறைவேற்றி வைப்பாள்.
அடுத்ததாக கணவருக்கு கொடுத்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அதன் மூலம் ஆண்டு முழுவதும் கணவரின் அன்பு பூரணமாக கிடைக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் ஒவ்வொரு கிண்ணம் கொடுப்பது அவசியம். இதனால், நீங்கள் சொல்லும் வேலைகளை அக்கறையுடன் செய்வர். இதன் பிறகே, குழந்தைகள், பெண்கள் பச்சடியை சாப்பிட வேண்டும்” என்றார்.

வெற்றி மேல் வெற்றி
புத்தாண்டின் ராஜாவாக புதன் இருக்கிறார். அவருக்கு அதிதேவதையான மகாவிஷ்ணுவை ஆண்டு முழுவதும் வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வரும். புதனன்று அதிகாலையில் நீராடி நெய்தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது நல்லது.
இன்றே நல்ல தீர்வு
'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்மர். பிரகலாதன் என்னும் பக்தனை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்.
அசுரனான இரண்யனிடம் அவனது மகன் பிரகலாதன், ''பரம்பொருளான மகாவிஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்றான்.. மகன் காட்டிய துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். அதில் இருந்து கர்ஜித்தபடி சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக நரசிம்மர் அவதரித்தார். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொண்டார். இவர் அவதார தினமான நரசிம்ம ஜெயந்தி இந்த ஆண்டு மே 6 ல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சுவாமிக்கு பானகம் படைத்து வழிபட நீண்ட கால பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

தீர்க்காயுசுடன் வாழுங்க!
சித்ரா பவுர்ணமியன்று கையில் ஏடும், எழுத்தாணியுமாக அவதரித்தவர் சித்ரகுப்தர். உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை நிர்வகிக்கும் கணக்கராக இருப்பவர் இவரே. கேதுவின் அதிதேவதையாக விளங்குபவர் சித்ரகுப்தர். இவரை வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர்.
காஞ்சிபுரத்தில் இவருக்கு தனிக் கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமியன்று விரதமிருந்து இவரை வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் உண்டாகும். இந்த ஆண்டு மே7 சித்ராபவுர்ணமியன்று சித்ரகுப்த ஜெயந்தி நடக்கிறது.
இது நம்ம வீட்டு கல்யாணம்!
மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனும், அவனது மனைவி காஞ்சன மாலையும் குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். யாகத் தீயில் பார்வதி குழந்தையாக அவதரித்தாள். தடாதகை என பெயரிட்டான். அவளை இளவரசியாக்கி போர் பயிற்சி அளித்தான். அவள் எண்திசைக் காவலர்களையும் வென்றாள். இறுதியாக, சிவலோகமான கைலாயத்தின் மீது போர் தொடுத்தாள்.
அங்கிருந்த சிவனின் அழகு கண்டு நாணம் கொண்டாள். 'உன் மணாளன் இவரே' என்று வானில் அசரீரி ஒலித்தது. அதன்படி சிவன் தலைமையில் பிரம்மா, திருமால், நந்தீஸ்வரர், தேவர்கள் அனைவரும் மதுரையில் ஒன்று கூட திருமணம் நிகழ்ந்தது. அவர்கள் இன்று வரை மதுரையில் நல்லாட்சி புரிந்து வருகின்றனர். மீன் போல் துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் 'மீனாட்சி' என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது. மே4 ல் மீனாட்சி திருக்கல்யாணத்தை 'இது நம்ம வீட்டு கல்யாணம்' என பக்தர்கள் வீட்டிலேயே வழிபட இருக்கின்றனர்.
மங்கல குங்குமம்
பெண்களுக்கு மங்கலம் அளிக்கும் ஆன்மிகத்தில் சிறப்பிடம் உண்டு.
* நெற்றியில் குங்குமம் இடுவதால் தீர்க்க சுமங்கலி பாக்கியம், லட்சுமிகரமான தோற்றம் உண்டாகும்.
* படிகாரம், சுண்ணாம்பு, மஞ்சள் மூன்றும் சேர்ந்ததே தரமான குங்குமம். இதிலுள்ள மஞ்சள் இரும்புச் சத்தாகவும், படிகாரம் கிருமி நாசினியாக மாறி நன்மை தருகிறது.
* நெற்றி வகிட்டில் இடும் போது மூளை, நரம்பு மண்டலத்திற்கு சக்தி பெருகும்.
* மூளைக்கு அதிக உஷ்ணம் செல்லாமல் தடுப்பதோடு குளிர்ச்சியை பாதுகாக்கும்.
* குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால் அதிக பலன் கிடைக்கும்.
* சூரியக் கதிர்கள் குங்குமத்தின் மீது படும் போது உடலுக்கு காந்த சக்தி உண்டாகும்.
தெரியுமா... உங்களுக்கு!
* தினமும் காலையும் மாலையும் விளக்கு ஏற்றுங்கள். கிழக்கு நோக்கி ஏற்றினால் இன்பமான வாழ்க்கை அமையும். பிறரை வசீகரிக்கும் சக்தி அதிகரிக்கும். வடக்கு நோக்கி ஏற்றினால், கல்வி, சுபநிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடை நீங்கும். செல்வம் பெருகும்.
* தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால், முன்வினைப்பாவம் தீரும். வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் குலதெய்வ ஆசி கிடைக்கும். புதுமஞ்சள் துணியைத் திரியாக்கி ஏற்றினால், கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். புது வெள்ளைத் துணியைத் திரியாக்கி அதை பன்னீரில் நனைத்து உலர வைத்து விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.
பெண்களுக்கு அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் திருமணம் நடத்தலாம். ஆனால், பிறந்த கிழமையில் நடத்தக் கூடாது.
* உங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லுாரியில் சேர்க்க அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.
* இந்த புத்தாண்டில் புதுமணத் தம்பதியரை விருந்து அழைக்க திங்கள், புதன், வெள்ளி, சனி நல்ல நாட்கள்.
* குடும்பத்தில் சீமந்தம் நடக்கப் போகிறதா? ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், உத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள். அன்று திரிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி திதியாக அமையுமானால் இன்னும் சிறப்பு.
* குழந்தை பிறந்ததும் தொட்டிலில் இட, ரோகிணி, திருவோணம், பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் குடும்பத்தில் திருமணமா.... திருமாங்கல்யம் வாங்க அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம். உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.

No comments:
Post a Comment