Thursday, April 9, 2020

திருந்தற ஜன்மம் இல்லை..

எடுப்பான பதிலடியால் எடப்பாடியார் அதிரடி! செந்தில் பாலாஜியால் மூக்குடைபட்ட ஸ்டாலின்!
மோதி மோதி மூக்கை உடைத்துக் கொள்வதில் மூத்த உடன்பிறப்பு ஸ்டாலினுக்கு இணை ஸ்டாலின் மட்டுமே! அமமுகவிலிருந்து திமுகவிற்கு அம்பு போல் தாவிய அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜியால் வந்த வினைதான் எல்லாம்.
அன்பு உடன்பிறப்பு அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, தானும் கொரோனா நேரத்தில் சமூகப் பங்களிப்பு செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தோடோ அல்லது நல்ல பெயர் வாங்கும் எண்ணத்தோடோ கரூர் மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க தன் எம்எல்ஏ நிதியிலிருந்து தொகையை ஒதுக்கி, அதற்கான ஒப்புதல் கடிதத்தை கரூர் கலெக்டரிடம் அளித்தார். முதலில் ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், பின்பு Territorial Jurisdiction ஐக் காரணம் காட்டி நிதியை ஏற்க இயலாது என்று கூறி ஒப்புதலை மறுத்து விட்டார்.
உடனே உடன்பிறப்பு ஸ்டாலினுக்கு இது உறுத்தியது. “மருத்துவ உபகரணங்கள் வாங்கத்தானே கொடுக்கிறார். பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிப் பார்த்தார்.
கலெக்டர் பிடிவாதமாக மறுத்து விட்டார். அந்த ரெஸ்பான்ஸைப் பார்த்ததும் ஸ்டாலின் பொங்கி எழுந்தார். “முதல்வர் எடப்பாடியார் கவனிக்கவும்” என்று ஆரம்பித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார்.
கலெக்டரின் செயலைக் கண்டித்ததோடு ஸ்டாலின் அதில் முத்தாய்ப்பாக “அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமில்லை” என்றும் இடித்துரைத்திருந்தார். இதற்கு இம்மீடியட்டாக ரெஸ்பான்ஸ் செய்தார் முதல்வர் எடப்பாடியார்.
“எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதியை தங்கள் தொகுதிக்குட்பட்ட வரம்பிற்குள்தான் பணிகளைச் செய்ய ஒதுக்க இயலும். அரவக்குறிச்சி எம்எல்ஏ கரூர் தொகுதியிலுள்ள மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர்கள் வாங்க நிதி ஒதுக்கியது எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு விதிகளின் படி ஏற்கத்தக்கதல்ல. எனவேதான் அந்நிதியை ஒப்புக் கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு எம்எல்ஏவும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வகையில் நோய்த் தடுப்பு பணிகள் செய்ய ஒவ்வொரு உறுப்பினருக்கும் 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்கிற ரீதியில் பதிலளித்துள்ளார்.
எடப்பாடியாரின் இந்த பதில் மேலோட்டமாகப் பார்த்தால் படு நாகரீகமாக இருந்தாலும், இதன் உள்ளே ஆராய்ந்தால் ஸ்டாலினைப் பீஸ் பீஸாக விமர்சித்திருப்பது தெரியவரும்.
அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் அறுபது லட்சத்தை கரூர் மருத்துவமனைக்கு பத்து வெண்டிலேட்டர்கள் வாங்க ஒதுக்கியுள்ளார்.
ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கும் தொகுதி வரம்பு உண்டு. அவர்கள் அந்நிதியை அவர்களின் தொகுதிக்குட்பட்ட ஏரியாவின் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அரவக்குறிச்சி எம்எல்ஏ நிதியை கரூர் தொகுதி மருத்துவமனைக்குப் பயன்படுத்த முடியாது. இது ஓர் அடிப்படை சமாச்சாரம்.
“ஆறுமுறை எம்எல்ஏ ஆகவும், மேயராகவும், அமைச்சராகவும், ஒரு மாபெரும் கட்சியின் தலைவராகவும், ஓர் அரிய ராஜதந்திரியின் அருந்தவப் புதல்வனாகவும் விளங்கும் ஸ்டாலின் அவர்களே! உங்களுக்கு இந்த அடிப்படை சமாச்சாரம் கூடத் தெரியவில்லையே” என்கிற மறைமுகக் கேலிச் சிரிப்புதான் எடப்பாடியார் அறிக்கையின் உள்ளே இருக்கும் நக்கலான பதிலடி.
புரிஞ்சுக்குங்க உடன்பிறப்புக்களே! பழனிச்சாமின்னா பட்டையாய் திருநீறு பூசிகிட்டு, பணியாரம் திங்கறவர்ன்னு நெனைச்சீங்களா....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...