Monday, June 7, 2021

விருதுகளை #புறக்கணிக்கும் #இளையராஜா!!

 ஆயிரம் படங்களை கடந்து விட்ட இளையராஜாவுக்கு பல்வேறு அமைப்புகள் விருது வழங்கி கவுரவிக்க விரும்புகின்றன. ஆனால் அதனை இளையராஜா மறுத்து வருகிறார். துபாயில் வழங்க இருந்த "பெஸ்ட் காண்ட்ரிபியூசன் ஆப் வோர்ல்ட் மியூசிக்" என்ற விருதையும், மலேசியாவில் வழங்கப்படுவதாக இருந்த "லைப் டைம் அச்சீவ்மெண்ட்" விருதையும் மறுத்திருக்கிறார். முதன் முதலில் தேசிய விருது வழங்கப்பட்டபோது அதையும் வாங்க மறுத்தும், கடந்த ஆண்டு லிம்கா சாதனையாளர் விருதை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. விருதுகளின் மேல் இளையராஜாவுக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை.

தேசிய விருது குறித்த தனது கருத்தை இளையராஜா இப்போது வெளியிட்டிருக்கிறார். அது வருமாறு: சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டவரின் படம்தானே சிறந்த படமாகவும் இருக்க முடியும். பிறகு எப்படி சிறந்த படம் என்று ஒரு படத்துக்கும், சிறந்த இயக்குனர் என்று வேறுபடம் இயக்கியவருக்கும் கொடுக்கிறார்கள். சிறந்த இசை அமைப்பளார் என்று ஒருவருக்கும், சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் என்று ஒருவருக்கும் கொடுக்கிறார்கள். சிறந்த பின்னணி இசை கொடுப்பவருக்கு சிறந்த பாடலை கொடுக்க முடியாதா, சிறந்த பாடலை கொடுப்பவருக்கு சிறந்த பின்னணி இசையை கொடுக்க முடியாதா? இதனால் தேசிய விருதுகள் மீது என்கு பெரிய மதிப்பில்லை. இவ்வாறு இளையராஜா கருத்து தெரிவித்திருக்கிறார்.
ராஜா சொல்லி வச்சா... அது ராங்கா போறதில்லே...!!

May be an image of 1 person




No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...