தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக (1980 -87) இருந்தார். அம்மா ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார் ( 1991 1996) . அதிமுகவில் செல்வாக்குமிக்க கொங்கு பகுதியின் தலைவராக இருந்தார்.
2006 - 2011ல் மைனாரிட்டி திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதிமுகவிலிருந்து சாரைசாரையாக இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவிற்கு போய்க்கொண்டிருந்தனர். அதையெல்லாம் அம்மா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஈரோடு முத்துசாமி ஜூன் 3ம் தேதி மு.கருணாநிதி பிறந்த நாள் விழாவின்போது திமுகவில் சென்று சேரப்போகிறார் என தகவல் பரவியது.
அதுவரை யார் போனாலும் கவலைப்டாத அம்மா முத்துசாமி திமுகவிற்கு போகப்போறார் என்றதும் அவரை தடுக்க நினைத்தார். முத்துசாமியை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். " திமுகவிற்கு போவதாக முடிவெடுத்திருந்தால் அந்த முயற்சியை கைவிடுங்கள். அடுத்து மீண்டும் அதிமுகதான் ஆட்சியமைக்கும். அதில் உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். வேறு எதாவது மனக்குறை இருந்தால் சென்னைக்கு வந்து என்னை நேரில் சந்தியுங்கள் " என பேசினார்.
இதை அப்போது ஜெயா டிவியில் செய்தியாகவும் வெளியிட்டார்கள். முத்துசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவர் திமுகவில் சேர ஆட்களை திரட்டிக்கொண்டிருக்கார் என்ற தகவல் கிடைத்ததும் மே 30ம் தேதி ( 2010) அவரை அதிமுகவிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
எதிர்ப்பார்த்தபடியே முத்துசாமி திமுகவில் சேர்ந்தார். கொங்கு மண்டலம் இனி திமுகவின் ஆதிக்கத்தில் வரும் என முத்துவேல் கருணாநிதியும் மனக்கோட்டை கட்டினார்.
அடுத்து வந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட ஈரோடு முத்துசாமி தோல்வியடைந்தார்.
அடுத்து 2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்ட ஈரோடு முத்துசாமி தோல்வியடைந்தார்.
தற்போதுதான் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் அமைச்சரலையிலும் இடம் பிடித்துள்ளார்.
இப்போதுக்கூட ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே இவரால் திமுகவிற்கு வெற்றியைத் தேடித்தர முடிந்தது. மீதம் உள்ள 5 தொகுதிகளில் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கிறது.
அவர் அதிமுகவில் இருந்தவரை கொங்கு மண்டல அதிமுகவின் ஆளுமைமிக்க தலைவர்தான். அப்படிப்பட்டவர் திமுகவிற்கு போனதும் எந்த அதிமுக தொண்டனும் முத்துசாமிக்காக திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. காரணம் தொண்டர்கள் பெரிதாக கட்சி மாறுவதில்லை குறிப்பாக அதிமுக தொண்டர்கள்.
ஐம்பதாண்டுகாலம் அரசியலில் பழம் திண்று கொட்டை போட்ட முத்துவேல் கருணாநிதியாலேயே முத்துசாமியை வைத்து ஒன்றும் செய்ய முடியவில்லை எனும்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினால் தோப்பு வெங்கடாசலத்தை வைத்து பெரிதாக என்ன செய்துவிட முடியும்?!

No comments:
Post a Comment