Tuesday, July 6, 2021

*சிந்திக்க சில வரிகள் 😘

 இன்றைய உலகத்தில் மனதளவில் மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களை விட மனக் கஷ்டத்துடன் வாழும் மனிதர்களை தான் அதிகம் பார்க்க முடிகிறது. காரணம் என்ன?? சற்று சிந்திப்போமா?

மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. அன்பு, ஆசை, பணம், பொருள், பதவி , பெயர் புகழ் ...... என அடுக்கிக்கொண்டே போகலாம்... இவை அனைத்தையும் நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்து காத்திருப்பதால் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியவில்லை.
மாறாக இவை அனைத்தையும் நாம் மற்றவர்களுக்கு எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
எனவே மற்றவர்களிடம் இருந்து எதையும் எடுக்கும் பிறவியாக இல்லாமல், பிறருக்குக் கொடுக்கும் பிறவியாக, மனதளவில் ஒரு புதிய பிறவியை எடுக்க இந்த நாள் ஒரு இனிய நாளாக எல்லோருக்கும் அமையட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...