Tuesday, July 6, 2021

இளையராஜா அவர்கள் திரைப்பாடல்களில் மட்டுமல்ல...! பிண்ணனி இசையிலும்...பின்னியெடுப்பார்...!

 தமிழ்த் திரையிசையுலகில் இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் பல #இசைக்கருவிகளின் #பயன்பாட்டு #முறைகள்மாறின. உதாரணத்துக்கு கிடாரை அதற்கு முன்னர் போலில்லாமல் கிட்டத்தட்ட வீணை போல பயன்படுத்தினார் இளையராஜா. ஒற்றை வயலினின் வாசிப்பை இளையராஜாவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என இசைக்கலைஞர்களே பிரித்துச் சொல்வர்.

ஷெனாயை இளையராஜா தனது துவக்கக்காலப் படங்களில் முழுக்க முழுக்க கிராமிய இசைக்கு மட்டுமே பயன்படுத்தினார். அதற்கு பிறகு அவர் ஷெனாயை முற்றிலும் புதிய முறையில் இசைக்கச் செய்தார். இளையராஜாவின் வருகைக்கு முன்னரும் ஷெனாயை சந்தோஷச் சூழலுக்கு பயன்படுத்தியிருந்தனர் என்றாலும் அது முற்றிலும் வடநாட்டு இசைமுறைப்படியே, அதாவது ஹிந்துஸ்தானி சாயலிலேயே, அமைக்கப்பட்டிருந்தது. சந்தோஷமாக ஆடிப்பாடி மகிழும் காதலர்களை ஷெனாயைக் கொண்டே உற்சாகப்படுத்தினார் இளையராஜா.
இளையராஜா இசையில்..
*பண்டிட் பல்லேஷ்* ஷெனாய் இசையுடன்..
மகாநதி படத்தின் பின்னணி இசை..
இதற்கு வாசித்த அனுபவத்தை பற்றி
*பண்டிட் பல்லேஷ்* சிலாகித்து சொல்கிறார்..
‘மகாநதி’ திரைப்படத்தில் கமலஹாசன் ஜெயிலில் இருக்கும்போது அவர் பெண் பருவமடைந்தபின் அப்பாவைப் பார்க்க ஜெயிலுக்கு வருவார். அப்போது பின்னணியில் ஷெனாயை உபயோகித்திருப்பார். எனக்கு மிகவும் பிடித்ததொரு ஷெனாய் பின்னணி இசை அது. ஆழ்வார்ப்பேட்டை மீடியா ஆர்ட்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. சோகத்தையும், சந்தோஷத்தையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்திய இசை அது. அது பரவலான கவனத்தையும் பெற்றது. படம் பார்த்துவிட்டுப் பலரும் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.
ஹே ராம்’ படத்தில் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலை அஜய் சக்ரபர்த்தி என்ற பெரிய மேதையைப் பாடவைத்தார். அப்பாடலின் இடையிசையில் நான் வாசித்திருக்கிறேன்.
அப்பாடலைப் பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. திரைக்கதைப்படி அப்பாடல் படத்திலேயே இல்லை.
படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இளையராஜா அவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு பாட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. உடனே மேனேஜரிடம் சொல்லி அஜய் சக்ரபர்த்தியிடம் சொல்லிவிட்டார்கள். விஷயம் கேள்விப்பட்டு ப்ரொடக்‌ஷன் தரப்பிலிருந்து ஏற்கனவே செலவு கையை மீறிப்போய்விட்டதே எனத் தயங்கினார்கள். சரி பாட்டைப் பதிவு செய்யவேண்டாம் என்று முடிவுசெய்து தயங்கியபடியே அஜய் சக்ரபர்த்தியை அழைத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், “எனக்குப் பணமே வேண்டாம். நான் என் மகளோடு வந்து இளையராஜாவைப் பார்க்கவேண்டும். என் மகளுக்கு அவர் ஆசிர்வாதம் வேண்டும்” என்று சொல்லித் தன் மகள் கெளஷிகி சக்ரபர்த்தியோடு சென்னை வந்து அப்பாடலைப் பாடினார்.
கெளஷிகி சக்ரபர்த்தியும் இன்று நன்கறியப்பட்ட இளம் ஹிந்துஸ்தானி பாடகி. வட இந்திய இசைக்கலைஞர்கள், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுக்கு அவர் மீது அத்தனை மரியாதை. பாடலைக் கேட்டபின்னும் அதை வேண்டாமென்று யாரும் சொல்வார்களா என்ன?
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...