Friday, July 16, 2021

ஒரு மனிதன் நேர்மையாக , எளிமையாக வாழ்வது தான் இயல்பு..

 பாஜகவை, சங்கத்தை, பிரதமர் மோடி அவர்களைப் புரிந்து கொள்வதில் தமிழர்களுக்கும் இருக்கும் பிரச்சனையே இதுதான்...!

இங்கு நேர்மையை , எளிமையை மதிப்பது என்பதெல்லாம் 1967 முதலே காணாமல் போய்விட்டது...! இங்கு நேர்மையானவர் , எளிமையானவர் என்று முன் நிறுத்தப்படுவர்களெல்லாம் #நல்லகண்ணு போன்ற டுபாக்கூர்கள் தான்...!
தன் வாழ்வில் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைக் கூட வகிக்காத நல்லகண்ணு நேர்மையானவர் என்று சொல்வது எந்த விதத்தில் சரி ?அப்படிப் பார்த்தால் இந்த தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் நேர்மையானவர்கள் - எளிமையானவர்கள் தான் ...
கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இங்கு திருடுபவன் , ஊழல் செய்பவன் , கொள்ளையடிப்பவன் தான் கெட்டிக்காரன் - பிழைக்கத் தெரிந்தவன் என்று ஆகிவிட்டது .நாம் பார்க்க , நம் கண்ணெதிரே பராரியாய்த் திரிந்தவன் பதவிக்கு வந்தவுடன் எப்படி இத்தனை கோடிகளுக்கு அதிபதி ஆகிறான்? இவனுக்கு எங்கிருந்து வந்தது இத்தனை பணம் ? இதெல்லாம் நம்முடைய பணம் தானே ? என்று அசூயைப் படாமல் , ஆத்திரப்படாமல் , அவன் கெட்டிக்காரன் - நல்லா சம்பாதிச்சுட்டான் என்று புல்லரிப்பதில் இருக்கிறது தமிழர்களின் பலவீனம்..
தேசிய பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தின் தலைவர் , அதன்பிறகு நாட்டை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் , தற்போது மத்திய அமைச்சர் என பல படிகள் உயர்ந்த போதும் , இன்றும் திரு.எல்.#முருகன் அவர்கள் அரசுக் குடியிருப்பில் தான் வசிக்கிறார் . அவர் மனைவி ஒரு அரசு மருத்துவராக கொரோனா வார்டில் பணிபுரிகிறார் . அவரது தாய் தந்தையர் அஸ்பெஸ்டாஸ் வேய்ந்த வீட்டில் வசித்துக்கொண்டு கூலி வேலைக்குச் செல்கிறார்கள்... இது இன்று செய்தி ஆகியிருக்கிறது..
நாகர்கோயில் எம்.எல்.ஏ திரு.எம்ஆர்.#காந்தி போன்றவர்கள் எளிமைக்கும் நேர்மைக்கும் இன்றும் வாழும் உதாரணங்கள் ....!தன்னுடைய திரண்ட சொத்துக்களை பொதுவாழ்க்கைக்குச் செலவு செய்துவிட்டு , தற்போது காலுக்குச் செருப்பு கூட இல்லாமல் அலையும் திரு . எம் . ஆர் காந்தி போன்றவர்களின் எளிமையை , நேர்மையை புரிந்துகொள்வது தமிழர்களுக்கு கஷ்டம்தான் .
பாஜக சார்பில் முதல்வர்களாக , மத்திய அமைச்சர்களாக , எம்.பி, எம்.எல்ஏக்களாக இருக்கும் பலர் மிக நேர்மையானவர்கள் . எளிமையானவர்கள்.. பிரதமர் மோடி அவர்களின் குடும்பத்தினர் இன்றும் மிக எளிமையான , ஒரு நடுத்தர வாழ்க்கைதான் வாழ்கிறார்கள் .
ஆனால் தமிழர்களுக்கு இதெல்லாம் அந்நியமாகி வெகுகாலமாகிவிட்டது.. திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதி குடும்பம் இன்று ஆசியாவிலேயே பணக்காரக்குடும்பம் ஆனதெப்படி என்று எவரும் கேள்வி எழுப்புவதில்லை...
மாறாக , நேர்மையாக - எளிமையாக வாழ்பவர்களை பரிகசிப்பது தமிழர்களுக்கு வழக்கமாகிவிட்டது . அந்த எண்ணம்தான் திரு.#அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை ஆட்டுக்காரன் என்று நக்கலடிக்க வைக்கிறது . ஐஐஎம்மில் எம்.பி.ஏ படித்து , ஐபிஎஸ் அதிகாரியாக சிறப்பாக பணிபுரிந்து , இந்த நாட்டுக்கு ஏதாவது என்று செய்ய வேண்டும் என்று சுகவாழ்வை , அதிகாரத்தை , ஒதுக்கி விட்டு மக்களுக்காக வாழ வந்த ஒருவர் தன் குடும்ப , குலத்தொழிலைச் செய்வதை எள்ளி நகையாடும் அளவுக்கு தமிழர்களுக்கு தோல் தடித்துப் போய்விட்டது.
எழுத்தாளர் அமரர்.சுஜாதா அவர்கள் ஒரு நாவலில் நேர்மையாக வாழ்வது தான் மனித இயல்பு என்று எழுதியிருப்பார் . அதுதான் உண்மை . ஒரு மனிதன் நேர்மையாக , எளிமையாக வாழ்வது தான் இயல்பு.. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி , ஊழல் செய்து சொத்து சேர்ப்பது மனித குலத்துக்கே விரோதமானது . அப்படிச் செய்பவன் கெட்டிக்காரனல்ல...அவன் முதல்தர அயோக்கியன் என்பதைத் தமிழர்களுக்குப் புரிய வைப்பதில் தான் திரு அண்ணாமலை அவர்களின் வெற்றியும் , தமிழகத்தில் பாஜக வேரூன்றி வளர்வதும் இருக்கிறது .
இறையருளால் திரு.அண்ணாமலை அவர்கள் அதை சாதிப்பார் என்று நம்புவோம்...!
May be an image of 1 person, outdoors and text that says "மகன் மத்திய அமைச்சர்... பெற்றோர் விவசாயக் கூலிகள்! துரை.வேம்பையன் நா.ராஜமுருகன்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...