உதயநிதி கூறுகிறார் திமுக ஆட்சியில் தமிழகம் மின் மிக மாநிலமாக மாறும் என்று. எனவே மின் தடையைப் பொறுத்துக் கொள்ளவும் என்ற ரீதியில் பேசி வருகிறார். மீடியா வாயை மூடிக்கொண்டு கேள்வி எதுவும் கேட்காமல் செய்தி வெளியிடுகிறார்கள்.
மீடியாவுக்கு வெக்கம் இல்லை உதய நிதி அவர்களுக்குச் சரியான விவரம் தெரியவில்லை. ஏன் என்றால் தமிழகத்தின் மொத்த மின் துறைக் கட்டமைப்பு
Thermal 14398 MW(Coal 13160; Gas 1027; Diesel 211)
Hydro 2178MW
Nuclear 2440MW
Wind Power 9632MW
Small Hydro 123MW
Bio Power 1019MW
Solar Power 4475MW
மொத்தம் ஏறக்குறைய 34267MW, இதில் அரசு நிறுவனமான TANGEDCO 16,034.58MW உற்பத்தித் திறன். தேவைக்குப் போக அதிகமாகவே தான் தமிழகத்தின் கட்டமைப்பு உள்ளது. எனவே தான் கடந்த 10 ஆண்டுகளாக மின் தடை அரிதாக இருந்தது.
பின் மின் தடை திமுக அரசு வந்ததும் வரக் காரணம் அணிலும் இல்லை கட்டமைப்பு இல்லாமலும் இல்லை. டெண்டர் ஆரம்பித்து மின் பகிர்மான விற்பனைகள் வரை அனைத்திலும் தங்களுக்குத் தேவையான நிறுவனங்களைக் கொண்டு வர திமுக அமைச்சர் முயல்கிறார் இல்லை வேறு வழியில் மின் உற்பத்தி பாதிப்பு என்று சொல்லி வெளியில் அவசர தேவை என்று சொல்லி அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறது என்று தான் குற்றம்சாட்ட முடியும் தவிரத் தமிழகம் தன்னறிவாக இல்லை என்பது போல் உதய நிதி பேசுவது சுத்த பிதற்றல்.
மின் தடைக்குக் காரணம் திமுக அமைச்சர் கொள்ளை அடிக்கும் புத்தி தான் தவிர வேறு இல்லை என்பேன்.
குரங்கு கையில் சிக்கிய பூ மாலை போல் ஆகிவிட்டது தமிழகம்.
-மாரிதாஸ்

No comments:
Post a Comment