Tuesday, July 13, 2021

திமுக வின் குழு ஆராயட்டும்"என உயர்நீதிமன்றம் தீர்ப்பு எழுத முடியாது!

 நீட் பாதிப்பு (?) குறித்து ஆராய எ கே ராஜன் குழு அமைக்க பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் வியப்பூட்டுகின்றன ! பாதிப்புகளை ஆராய்ந்தால்தான் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்க முடியும் என கருத்து ! 4 வருடங்களாக அமைதியாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது நீட் தேர்வு ! யாருக்கு பாதிப்பு என்று யாரேனும் (குறிப்பாக மாணவர்களுக்கு) வழக்கு தொடர்ந்தார்களா ? உண்மையாக

பாதிக்கப்பட்டது தனியார் கல்லூரி கல்வி தந்தைகள்தான் என்பது பட்டவர்த்தனம் ! இதில் உயர்நீதி மன்றம் வழக்கு தொடர்ந்தவரையே நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு ? என்றும் கூறி இருக்கிறது ! எனவே தாராளமாக எ கே ராஜன் குழு ஆராய்ந்துவிட்டு போகட்டும் ! மேற்கொண்டு என்ன செய்ய போகிறார்கள் என்றும் பார்க்கலாம் ! உச்சநீதி மன்றம் 7 பேர் கொண்ட அமர்வு சாதக பதக்கங்களை ஆராயாமல் தீர்ப்பளித்து விட்டார்களா என்ன ? இது ஒரு அரசியல் விளையாட்டு அவ்வளவுதான் ! ஏதோ தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டது போல சித்தரிக்க படுகிறது ! பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்ன செய்வார்கள் எனறு !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...