Tuesday, July 6, 2021

இ.சி.ஆரில் முதல்வர் ஸ்டாலின் 'சைக்கிளிங்' : போலீஸ் குவிப்பால் மக்கள் அவதி.

 முதல்வர் ஸ்டாலின், 4ம் தேதி, மகாபலிபுரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனால், கிழக்கு கடற்கரை சாலையின், இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

இ.சி.ஆர், முதல்வர் ஸ்டாலின்,  சைக்கிளிங் , மக்கள் அவதி

அங்குள்ள, அக்கரை கிராமத்தில் வசிக்கும், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஷ்வரி பிரியா, இதுபற்றி கூறியதாவது:சைக்கிள் பயிற்சி செய்வதற்கு தேவையான, அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து தான், முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்தார்.ஆனால், கொரோனா பரவலை தடுப்பதற்காக, ஊரெல்லாம் முகக் கவசம் போடச் சொல்லி வலியுறுத்தும் முதல்வர், அன்றைய தினம் முகக் கவசம் அணியவில்லை. மக்கள் பார்வையில் இருந்து தப்புவதற்காகவாவது, முகக் கவசத்தை அணிந்து இருக்க வேண்டும். முகத்தை காட்டி, ஸ்டாலின் நீண்ட தூரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் போது, சாலை ஓரத்தில் இருக்கும் மக்கள், அவரை பார்க்க வருவது இயற்கை தான். அப்படித் தான், அவர் சென்றபோது, தன்னிச்சையாக மக்கள் கூடி விட்டனர்.
...

சென்னை மாநகர எல்லையில் இருந்து முதல்வர் புறப்பட்டதும், காவல் துறை கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர், இரண்டு துணை கமிஷனர்கள், ஆறு உதவி கமிஷனர்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 51 சப் - இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 200 உள்ளூர், ஆயுதப்படை, சிறப்பு பிரிவு போலீசார், வழி நெடுகிலும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர்.

துப்பாக்கி ஏந்திய நிலையில், பத்துக்கும் மேற்பட்ட போலீசார், ஸ்டாலின் உடன் சென்றனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில், பத்தடிக்கு ஒரு போலீஸ்காரரை நிறுத்தி இருந்தனர்.
ஏற்கனவே, காவல் துறையில் ஆள் பற்றாக்குறை இருக்கும் போது, இது தேவையா?
மக்களை பாதுகாக்க வேண்டிய பணியில் இருக்கும் போலீசாரின் நேரத்தை, முதல்வர் இப்படி வீணடிக்கலாமா?

முதல்வர் பொது நிகழ்ச்சிக்கோ, மக்கள் பணிக்கோ செல்லும் போது, இப்படிப்பட்ட பாதுகாப்பு என்றால், ஏற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட ரீதியில், தன் உடல் நலத்தை பேணுவதற்கு, இப்படி மக்களை வாட்டி வதைப்பதோடு, போலீசாரையும் வாட்டி வதைக்கலாமா?
இதெல்லாம் அதிகார துஷ்பிரயோகம். நடிகர்கள் விஜய், அஜித் போன்றவர்களும், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் தான், பங்களா கட்டி வாழ்கின்றனர். அவர்களும் உடற்பயிற்சிக்காக, கிழக்கு கடற்கரை சாலையில், ஹெல்மெட், முகக் கவசம் அணிந்து, அடையாளத்தை வெளிக்காட்டாமல், சைக்கிளில் செல்கின்றனர்.இதனால், மக்கள் அவர்களை நோக்கி கூடுவதில்லை; போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


ஸ்டாலின் ஓட்டிய சைக்கிள் என்ன விலை?



முதல்வர் ஸ்டாலின் ஓட்டிய, 'பெடல்ஸ்' சைக்கிளை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், 'டெய்ஜோ'. சென்னை அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம், மூன்று வகை சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. புதுமையை புகுத்தும் நோக்கில், தொழில்நுட்ப ரீதியிலான சைக்கிள்களை, அறிமுகம் செய்து வருகிறது.

அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான, 'பெடல்ஸ் எச் 2, பெடல்ஸ் ஓ2, பெடல்ஸ் சி2' ஆகிய, சைக்கிள்கள் சந்தையில் விற்பனையாகின்றன. இதில், 81 ஆயிரத்து, 500 ரூபாய் விலை உடைய, 'பெடல்ஸ் சி2' என்ற வகை சைக்கிளையே, முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார்.நீண்ட தூரம் செல்வதற்காக, இந்த சைக்கிள் பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சம், 120 கிலோ எடை உள்ள நபர்கள் மட்டுமே, இந்த சைக்கிளை பயன்படுத்த முடியும். 48 செ.மீ., நீளம் உள்ள சைக்கிளின், 'பிரேம்' அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. 7.0 ஏ.எச்., 'லித்தியம் அயன் பேட்டரி' உடைய, 250 வாட்ஸ் திறன் உடைய மோட்டார், இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது.ஏழு, 'கியர்கள் ஸ்பீடு' உடைய இந்த சைக்கிளை, பெடல் செய்தால் மட்டுமே இயக்க முடியும். சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார், பெடல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

சைக்கிளின் முன்பக்க பொருத்தப்பட்டுள்ள, 'ஷாக் அப்சர்வ்ஸ், ஹைடிராலிக்' முறையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது.'பெடல்ஸ்' செயலி வாயிலாக, இந்த சைக்கிளை இயக்க முடியும். எல்.சி.டி., திரை பொருத்தப்பட்டுள்ளது. 5.5 அடிக்கு அதிகமாக உயரம் உடைய நபர்கள் பயன்படுத்தும் விதமாக, இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சைக்கிளின் முன்புறம் மற்றும் பின்புறம், 25 எல்.யு.எக்ஸ்., அளவு உடைய, எல்.இ.டி., 'லைட்' பொருத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...