*வசதியான வியாபார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய லட்சியத்திற்காக பேராசிரியராக மதுரையின் பிரபல கல்லூரிகளில் பணியாற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்,, பேராசிரியர் தாஸ் என்றாலோ,,, “தோழர்” தாஸ் என்றாலோ மதுரையில் பிரபலம்... என்னே தோழரா? என்று புருவமுயர்த்துவது புரிகிறது,,, ஆமா...*
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, July 13, 2021
*யார் இந்த மாரிதாஸ்?*
*கம்யூனிஸ்டாகத்தான் இவர் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்,, ஒரு கட்டத்தில் அது தோல்வியடைந்த கொள்கை, எதார்த்தத்துற்கு ஒவ்வாதது என தெளிந்து ஆசிரியராகவே தொடரலாமா என்று இருக்கும் போது தான் அன்னாஹசாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுக்க அதிர்வுகளை ஏற்படுத்தியது,,, அதன் மதுரை போராட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக அதாவது தலைநகர் சென்னையில் நடந்ததை விட அமர்க்களமாக நடத்தி முடித்தார்... பாதை மாறியது...*
*அதுவரை Social Media-க்களின் பக்கம் அவரது கவனம் இல்லை, மாணவர்களுக்கு பாடம் நடத்தவே பத்தி பத்தியாக கட்டுரைகளை தூக்கிக்கொண்டு முகநூல் வந்தார்,,, நேர்மையும் தைரியமும் உண்மையும் இருந்ததால் அமோக வரவேற்பு கிடைத்தது...*
*பின்னர் White Board-ஐ தூக்கிக் கொண்டு YouTube-வந்து பாடம் நடத்தினார். புள்ளிவிவரங்கள் அரசியல் தவிர சினிமா, கிசுகிசு, அமானுஷ்யம், புரளி என எதுவும் இல்லாததால் முதலில் கொஞ்சம் திணறினாலும் சரியான நேரத்தில் தமிழ் சமூகம் இவருக்கான அங்கீகாரத்தைக் கொடுத்தது. இன்று சமூகவலைதளங்களில் ஐந்துலட்சம் Followerகளை கடந்து அநாயசமாக சென்று கொண்டிருக்கிறார்,,,*
*படிப்பதற்கென்றே லண்டன் ஜெர்மன் உட்பட உலகம் முழுக்க இருக்கும் பத்திற்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூலகங்களில் வருடம் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் சந்தா செலவு செய்து உண்மையை தெரிந்துகொள்கிறார், படித்தலின் மீதான இவரது ஆர்வம் அலாதியானது...*
*மாரிதாஸ் அவர்களின் பிரச்சனை என்னவென்றால் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதில் முழு ஈடுபாடு செலுத்தி பசி, வெளியுலகம் மறந்து காரியத்தை தனக்கு திருப்தி தரும் வண்ணம் முடித்த பிறகே தூக்கம் வரும் அவருக்கு. ஜெகத்ரட்சகன் சம்பவம் போன்ற சில வீடியோக்களின் பின்னால் 2-3 நாள் வரை தூக்கம் தடைப்பட்டிருக்கிறது.*
*கிடைத்த அனைத்து தகவல்களையும் திரட்டி கோர்வையான வீடியோவாக பாமரனுக்கும் புரியும் வகையில் ஒரு பார்சல், நிர்வாகத்துக்கு புரியும் வகையில் சம்பந்தப்பட்ட துறைக்கு புள்ளிவிவரங்கள் மற்றும் ஆதாரங்களோடு கூடிய ஒரு ரிப்போர்ட் பார்சல் பண்ணி அனுப்பி,,, பின் வீடியோ ரிலீசாகி அவனுங்க கதறிக்கொண்டு இருக்கும் போது இவர் பிரியாணி சாப்பிட்ட ராஜதிருப்தியோடு அவர் பாட்டுக்கு நிம்மதியா தூங்கி இருப்பார்....*
*இவர் வீடியோ வெளியிடுவது மட்டும் தான் வெளியில் தெரியும், பல Urban Naxalகளை வீட்டோடு உட்கார வைத்ததில் இவரது களப்பணி அளவில்லாதது, நேரம் வரும்போது உண்மை வெளிவரும்... ஐநா புகழ் திருமுருகன் லாட்டரி திரமுரகன் ஆகி வீட்டோடு உட்கார்ந்ததை கொஞ்சம் லிங்க் பண்ணி பாருங்க விசயம் புரியும் & இது சாம்பிள் தான்...*
*இவருடைய பெயர் மரியதாஸோ, மரிதாஸோ அல்ல,,, மாரி+தாஸ்,,, மாரி என்றால் மழை, தாஸ் என்றால் காதலன் அதாவது மழையை நேசிப்பவன் என்று பொருள்...*
*இது எல்லாவற்றிற்கும் மேல் இவர் ஒரு கடுமையான உழைப்பாளி,,, இன்று சிறப்பான சம்பவம் செய்துள்ளோம் “Cheers let’s celebrate the Special Day” என்று இல்லாமல் கார்த்திகைச் செல்வன், செந்தில், குணாவைத் தொடர்ந்து அடுத்து யார்? நெல்சனை மன்டேலாவாக மாற்றலாமா
அல்லது திமுக கண்ணை எப்படி நோண்டலாம் என யோசித்துக் கொண்டிருப்பார்... ப்லீஸ் இன்று ஒருநாளாவது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் பேராசிரயரே...*
*மேடை மற்றும் வீடியோக்களில் கோபமாக பேசினாலும் இயற்கையாகவே அமைதியான குணமுடையவர். நேரில் வசீகரமான தோற்றமுடையவர், வீடியோவில் ஏன் தான் டெரராக காட்சி தருகிறாரோ தெரியவில்லை...*
*பத்திரிக்கைத் துறையில் ஆர்வமிருக்கும் மாணவர்களுக்கு investigative Journalism வகுப்பு நடத்தப் போகிறார். தாஸ்,,, மாரிதாஸ் அவர்கள் மேன்மேலும் பல சிறப்பான சம்பவங்களை நிகழ்த்த
வாழ்த்துகள்
.*
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment