உங்கள் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உடல் சோர்வைப் போக்கும் இரும்புச் சத்துக்களை அதிகப்படுத்தவும், முக்கிய உணவு பொருட்கள்.
நம்முடைய உடல் பல செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவை நன்றாக இயங்க சிவப்பு அணுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு வேளை உங்கள் உடலில் குறைந்த அளவு சிவப்பு அணுக்கள் காணப்பட்டால், அவை உங்கள் உடலுக்கு சோர்வை ஏற்படுவதோடு, இரத்த சோகை நோய்க்கும் வழிவகுக்கின்றது.
உங்கள் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உடல் சோர்வைப் போக்கும் இரும்புச் சத்துக்களை அதிகப்படுத்தும் முக்கிய உணவு பொருட்கள். அவைகளில் பீட்ரூட், பேரீட்சை பழங்கள், முளை கட்டிய பயிறுகள், கடலை பருப்பு மற்றும் மாதுளை போன்ற பொருட்களும் உள்ளடங்கும்.
மேலும் உங்கள் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவது போல் உணர்ந்தாலோ? அல்லது நீங்கள் எப்போதுமே சோர்வாக இருப்பது போல் உணர்ந்தாலோ? அதை பற்றிய கவலையை விடுங்கள். இதோ உங்களுக்கான ஹெல்தி டிப்ஸ்…
பீட்ரூட்
பீட்ரூட்டில் இரும்புச் சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன. இவை ரத்த சிவப்பு அணுக்களை சரிசெய்யவும், அவற்றை மீண்டும் செயல்படுத்தவும் உதவுகின்றன. இதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். கேரட், ஆரஞ்சு மற்றும் நெல்லிக்கனி சாறுகளை விட முதலிடத்தில் பீட்ரூட் சாறு உள்ளது.
“ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் சிறந்த ஒன்றாகும். இவற்றில் இரும்புச் சத்து மட்டும் அதிகம் காணப்படாமல், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துடன் ஃபோலிக் அமிலமும் அதிகம் காணப்படுகிறது. ஆரோக்கியமான இரத்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் பீட்ரூட் சாறு குடிக்க வேண்டும்”.
பீட்ரூட் மற்றும் மாதுளை ஆகியவற்றை சேர்த்து சாறாக அடித்து, தினமும் காலை ஒர்க்அவுட்க்கு பிறகு பருகி வரலாம். “இது இரும்புச்சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை பளபளக்க செய்யும்”.
மாதுளை
வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக மாதுளை உள்ளது. இதில் காணப்படும் அஸ்கார்பிக் அமிலம் இரத்த எண்ணிக்கையை சீராக்க உதவுகிறது. மேலும் ஒருவரின் அன்றாட உணவில் இவற்றை சேர்க்கும்போது ஹீமோகுளோபின் அளவு உயரும்.
கடலை பருப்பு
கடலை பருப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க அளவு புரதம், ஃபைபர், கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலேட் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் உள்ளன. உடலில் அத்தியாவசிய இரும்புச்சத்துக்கு ஒரு கப் கடலை பருப்பு பரிந்துரைக்கப்படுகிறது. “பீட்ஸின் ஒரு பக்க சாலட் மூலம் தினமும் விருப்பப்படி மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு நீங்கள் கடலை பருப்பு சாப்பிடலாம்”.
முளை கட்டிய பயிறுகள்
ஃபோலிக் அமிலக் குறைபாடு, குறைந்த ஹீமோகுளோபின் அளவிற்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது. பச்சை இலை காய்கறிகள், முளை கட்டிய பயிறுகள், உலர்ந்த பீன்ஸ், வேர்க்கடலை, வாழைப்பழங்கள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உட்கொள்வது மூலம் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
பேரீட்சை பழங்கள்
பேரீட்சையில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் அதிக சர்க்கரை அளவைக் கொண்டிருப்பதை அறிந்திருப்பதால் பேரீட்சை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment