Thursday, September 30, 2021

ஸ்ரீ காலபைரவர் 💐வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள்: 💐

 நாக தோஷம் விலகும். திருமணத் தடை அகலும்,

குழந்தை பேறு கிட்டும் , ஏழரைசனியின் தோஷம் நீங்கும் , எதிரிகள் தொல்லை நீங்கும், வியாபாரத்தில் வெற்றி கிட்டும்.
ஸ்ரீ காலபைரவர் காயத்ரி மந்திரங்கள் இன்று வழிபட்டு மகிழ்வோம்
காயத்ரி மந்திரங்கள்
பைரவ காயத்ரி 1
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
பைரவர் காயத்ரி 2
ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
May be an image of 1 person

சிந்தித்து செயலாற்றுங்கள் .

 ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.

“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை" என்றாள் தாய்.😏
நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் தாய்.😬
ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...
அந்த சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. 😋
அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள்.
பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.😚
பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ தாய் சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு. 💛
அச்சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் குழந்தை படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “மகளே.. என்னை உனக்கு பிடிக்குமா?”
”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”💙
“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”
“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.💔
"பரவால்லை குட்டிம்மா..." என்று புன்னகையுடன் பதில் சொன்னார் தந்தை.
இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “மகளே... என்னை உனக்கு பிடிக்குமா?”
”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்”
“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.
“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அச் சிறுமி.
இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி..” என்றார் தந்தை.😕
சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், தந்தை இரவு கதை சொல்ல வந்தபோது....சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து தந்தையின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.😐
அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட தந்தை, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.💥
அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். குழந்தை தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை கொடுத்தார்.💚
"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா குட்டி... நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் தந்தை.💞
இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோரையும் படைத்த இறைவன்...
அந்த குழந்தைதான் நாம்.💕
ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.😞
அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான, நிரந்தரமான நிம்மதியை நமக்கு பரிசளிப்பான்.😘
நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்,உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...😁
ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன.... அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்... போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.👍
அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.🙏🙌
அன்பே சிவம் அன்பே அருட்பெருஞ்ஜோதி
சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏
அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏
ஆலவாய் அரசனே அரசியே போற்றி போற்றி 🙏🙏🙏

சிக்கிய தமிழகத்தை சேர்ந்த மிக பிரபல அரசியல்வாதி !!! இப்போது தெரிகிறதா காவல்துறை ஆளுநர் அதிரடி பின்னணி!!

 கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத் துறைமுகத்தில் 21000 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டது, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை இந்தியாவில் விநியோகம் செய்ய இருந்த நிலையில் பதுங்கியிருந்து கைது செய்தது போதை பொருள் தடுப்பு பிரிவு. இந்நிலையில் அதில் சென்னையில் தங்கி இருந்த தம்பதியினர் பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மிக பிரபலமான அரசியல்வாதி சிக்கி இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பல் ஒன்றின் மூலமாக இரண்டு கன்டெய்னர்களில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் கடந்த வாரம், இரானிலிருந்து குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்த குறிப்பிட்ட கப்பலை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, அதிகாரிகள் போதைப்பொருள்களைக் கைப்பற்றி, அந்தக் கப்பலில் இருந்த இரண்டு ஆப்கனியர்களைக் கைதுசெய்தனர். அப்போது அந்த ஹெராயின் பெட்டிகள் மீது 'ஆஷி டிரேடிங் கம்பெனி', சத்தியநாராயணபுரம், விஜயவாடா என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.அதைத் தொடர்ந்து, அந்த முகவரியில் ஆய்வு மேற்கொள்ள, புலனாய்வு அதிகாரிகள் விஜயவாடா விரைந்தனர். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் அதிகாரிகள் விசாரித்ததில், அந்தப் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த வீடு பூட்டிக்கிடந்திருக்கிறது.
மேற்படி, அந்த வீட்டில் முகப்பவுடர் வியாபாரம் செய்துவரும் காக்கிநாடாவைச் சேர்ந்த கணவன் - மனைவி, சுதாகர் - வைஷாலி என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. அதேபோல், ஹெராயின் கடத்தலில் தொடர்புடைய அந்தத் தம்பதி தற்போது சென்னையில் வசித்துவருவதாகவும் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சென்னை விரைந்த புலனாய்வு அதிகாரிகள் சென்னை போலீஸாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்தத் தம்பதி குறித்த பல தகவல்கள் வெளியாகின. வெளியுலகுக்கு முகத்தில் பூசும் பவுடர் இறக்குமதி செய்து விற்பனை செய்துவருவதைப்போல் காட்டிக்கொண்டு, சுதாகர், தன் மனைவி வைஷாலியின் பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் பெற்று ஜி.எஸ்.டி பதிவு செய்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டடுவந்தது தெரியவந்தது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த இந்தத் தம்பதி சென்னையில், கொளப்பாக்கம் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கி, ஆந்திரா முகவரி கொண்டு கடத்தல் தொழில் செய்துவந்ததும் அம்பலமானது.
இதைத் தொடர்ந்து சென்னை விரைந்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் பதுங்கியிருந்த சுதாகர் மற்றும் அவரின் மனைவி வைஷாலி இருவரையும் அதிரடியாகக் கைதுசெய்தனர் இவர்களை குஜராத் போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர், இந்நிலையில் தம்பதி கொடுத்த பதிலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது விசாரணை தரப்பு.
நான்கு முறை இது போல் வியாபாரம் செய்துள்ளதாகவும், இந்தியாவில் முக்கிய மாநிலங்களில் சட்டமன்றம் பொது தேர்தல் வருவதற்கு ஓராண்டிற்கு முன்னர் போதை பொருள்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் என்றும் அதனை பங்கிட்டு விற்பனை செய்ய நாடு முழுவதும் பல்வேறு ரவுடிகள், அரசியல்வாதிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் என பலரை பயபுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர் எனவும்..,
இதில் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுபடுவதாகவும், ஒரு அரசியல் கட்சி தலைவர் முழு நேர வேலையாக இதற்கு என்றே ஒரு குழுவை வைத்து விநியோகம் செய்ய உதவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்து உள்ளனராம், இந்த தகவல் உடனடியாக தமிழக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கைது படலத்தை தொடங்கியுள்ளதாம் தமிழக காவல்துறை.
பிரபல ரவுடிகள் கைது என்ற போர்வையில் இந்தியாவை அதிரவைத்த போதை பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடி வருகிறது தமிழக காவல்துறை, இந்த வழக்கு NIA வசம் செல்ல வாய்ப்பு இருப்பதால் முழுமையாக தகவலை சேகரித்து, இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும், ஆதாரங்களை வெளியிடவும் தயாராகி கொண்டு இருக்கிறதாம் மத்திய புலனாய்வு அமைப்புகள்.
விரைவில் மிக மிக பிரபலமான அரசியல்வாதியின் வலது கரமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அதில் இருந்தே அந்த அரசியல்வாதி யார் என்பது வெளி உலகிற்கு தெரியவரும் என கூறப்படுகிறது, இது போல் போதை பொருள்கள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நாட்டில் கலவரங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட பல காரியங்களை செய்ய தேவையான பணம் கிடைப்பது தெரியவந்துள்ளது.
மத்தியில் மோடி அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்திய நிலையில் தங்கம், போதை பொருள்களை சட்டவிரோதமாக கடத்தி அதன் மூலம் பணத்தை சம்பாரிக்கும் செயலை கடத்தல் கும்பலுடன் அரசியல் வாதிகள் கை கோர்த்து இருப்பது பெரும் அச்சத்தை மக்களிடம் உண்டாக்கியுள்ளது.
ஆனால் என்றும் பாரதத்தை காக்கும் மத்திய அரசை குறை சொல்லியே பழக்கப்பட்ட தமிழக தற்குறிகள் தாய் நாட்டிற்கு எதிராகாவே குரைச்சலில் குதிப்பனர்....

சரி சுப வீரபாண்டியன் தான் ஒரு இந்து என்று சொல்லி உள்ளாரா...???

 கலைஞர் டி.வி.யின் 'ஒன்றே சொல்,நன்றே சொல்' பகுதியில் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஹிந்து மதத்தைச் சாராத ஒருவரை பிடித்து ராம் ராம் என்று கூற வற்புறுத்தி, அவரை, தாக்கியிருப்பதை கண்டித்து பேசும் பொழுது, "ராம் ராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறுவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த நம்பிக்கை இல்லாத ஒருவரை வற்புறுத்துவது அராஜகம். மற்றவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும்" என்றெல்லாம் பேசினார். ரொம்ப சரி. மற்றவர்கள் கடவுளாக வணங்கும் பிள்ளையார் விக்கிரகங்களை போட்டு உடைப்பதும், அவர்கள் வணங்கும் ராமனையும்,கிருஷ்ணனையும் அவதூறாக பேசுவதும், அந்த படங்களுக்கு செருப்பு மாலை போடுவதும் கூட அராஜகம்தானே மிஸ்டர் சுப.வீ.? மத நம்பிக்கையோடு ஒரு சாரார் அனிந்திருக்கும் பூனூலை அறுப்பதும் எந்த வகை?

எனக்கு ஒரு சந்தேகம் ரமதான் மாதத்தில் நீங்கள் அரபு நாடுகளுக்குச் சென்றால் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ காலை முதல் மாலை வரை நீங்கள் பொது இடங்களில் எதுவும் சாப்பிடவோ, ஏன் தண்ணீர் கூட அருந்த முடியாது. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது, உடனடியாக கைது செய்யப்படுவீர்கள். ஏன் சவுதியில் பகலில் சமைக்கும் வாசனை கூட வரக்கூடாது. அங்கு போய் இது அராஜகம் என்று சொல்ல முடியமா உங்களால்?
அபுதாபியில் நடைபெறும் ஐ.பி.எல். மாட்சின் டெலிகாஸ்ட்டிற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். சொல்லப்பட்டிருக்கும் காரணம், ஸ்டேடியத்தில் பெண்கள் அமர்ந்து மாட்ச் பார்க்கின்றனராம். இதையெல்லாம் விமர்சிப்பாரா திரு.சுப.வீ.? சீ சீ அதையெல்லாம் விமர்சிக்க அவருக்கு என்ன பைத்தியமா? இந்துக்கள்தான் அப்பாவிகள்,என்ன சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பார்கள், அதனால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

கந்த சஷ்டி கவசத்தை சொல்லுவதால் கிடைக்கும் மகிமை.

 உண்மை முயற்சித்து பாருங்கள்...

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள்.
இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.
அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும்
பெருமான் திரு முருகப் பெருமான்.
அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.
நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும். கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறி வகுத்தளித்தனர்.
முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.
இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர்,மிகச்சிறந்த முருக அடியார் என்பது தான் தெரியுமே தவிர, அவர் எங்கு,யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
250 வயது: எனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது.
மேலும், சஷ்டிகவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டிகவசம் என்று அழைக்கப்படுகின்றன.
ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம் தான்.
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.
ஒரு சமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.
வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.
திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.
முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான்காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.
சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...!
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்று வலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.
கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்.
அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

கருணாநிதி தான் நம்பிக்கை துரோகி :துரைமுருகனுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை.

'நாவடக்கத்துடன் பேச வேண்டும்' என்று அமைச்சர் துரைமுருகனுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 கருணாநிதி ,நம்பிக்கை துரோகி  :துரைமுருகன், அ.தி.மு.க., எச்சரிக்கை

அவர்கள் அறிக்கை:திருப்பத்துார் மாவட்டம்ஜோலார்பேட்டை தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன்,அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரை, நம்பிக்கை துரோகி எனக்கூறி இருப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.


அண்ணாதுரை மறைவுக்கு பின், கருணாநிதியை முதல்வராக்கிய எம்.ஜி.ஆரை, நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது, கடும் கண்டனத்திற்குரியது.தி.மு.க., ஆட்சி பீடத்தில் அமரவும், கருணாநிதி முதல்வராகவும் காரணமானவர் எம்.ஜி.ஆர்., தான். கணக்கு கேட்டதற்காக, அவரை கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதி தான் நம்பிக்கை துரோகி.காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, சத்தம்போடாமல் திரும்ப பெற்றது, கருணாநிதி செய்த மிகப்பெரிய துரோகம். கச்சத்தீவை தாரை வார்த்தது, மீனவ மக்களுக்கு செய்த துரோகம்.

இலங்கையில் போர் நின்றுவிட்டது எனக்கூறி, கொத்து கொத்தாக கொல்லப்பட காரணமாக இருந்தது, இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகம். 'நீட்' தேர்வுக்கு வித்திட்டது ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு செய்த துரோகம். கட்சியே குடும்பம் என்றிருந்த தி.மு.க.,வை, குடும்பமே கட்சி என்று மாற்றியது, தி.மு.க.,வினருக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.இப்படி எண்ணற்ற துரோகங்களை செய்தவர் தான் கருணாநிதி. அவரது மறைவுக்கு பின், அந்தப் பணியை துரைமுருகன் எடுத்துக் கொண்டு இருக்கிறார் போலும்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆரை, நம்பிக்கை துரோகி எனக்கூறிய துரைமுருகனின் பேச்சு, நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டம்.துரைமுருகனின் பேச்சு, அ.தி.மு.க., தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில், அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது!

 திமுகவின் ஆர்எஸ்.பாரதி #ரெட்லைட்_மீடியா னு சொன்னப்ப வராத கோபம் இப்போ இந்த மீடியாவுக்கு H.#ராஜாஜி 'Presstitutes' என்று சொன்னதில் வருகிறது என்றால் சொன்ன கருத்து சரிதானே..!

😍😍👌👌
ஏனெனில் சொல்வது யார் என்பது பொறுத்தே இங்கு எதிர்வினை அமையும்...! 😏😏🏌️‍♂️🏌️‍♂️
கடந்த #அதிமுக_அரசுக்கும், மத்திய #பாஜக_அரசுக்கும் எதிராக இதே #வேசி_மீடியா எப்படியெல்லாம் செய்திகளை திரித்து வெளியிட்டு விவாதம் நடத்தியது என்பது நல்லா தெரியும்டா எங்களுக்கு..! 😏
உண்மையை திரித்து கூறி வெறும் புரளிகளையே செய்தியா சொல்லி, திமுகவுக்கு முட்டு கொடுக்கும் வேலையை மட்டுமே 24 மணி நேரமும் செய்த, செய்து கொண்டிருக்கும் பாவத்துக்கெல்லாம் #டிவிடி_மீடியா பசங்களா அனுபவிப்பீங்க இன்னும் நல்லா கதறுங்க ...! 👌👌
கடவுள் இருக்கான் குமாரு...! 😏😏😍😍
May be an image of 2 people and text that says "PROSTITUTES என்றால் விபச்சாரம் தானே? அனைத்து மீடியாவும் விபச்சாரம் செய்பவர்கள் என்கிறான் ராஜா. மீடியாக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது? G 28-09-2021 28-09- u2brutus /u2brutusoff u2brutus surya xavier @suryaxavier1 u2brutus"

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...