Thursday, December 23, 2021

இந்தியனாக இருக்க ஏன் பெருமை கொள்ள வேண்டும்?

 ‘இந்தியனாக இருக்க ஏன் பெருமை கொள்ள வேண்டும்?’ என்பதைப் பற்றிய ஒரு தொகுப்புக் கட்டுரை தான் இது.

உண்மையில் உலகளவில் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து உள்ளனர். இன்னும் எதிர்காலத்திலும் எண்ணற்ற சாதனைகளை புரிவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். அந்த வகையில் உலகளவில் இந்தியர்கள் சாதித்தது என்ன? வாருங்கள் பார்ப்போம்.
* அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.
* அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
* உலகில் உள்ள ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
* அமெரிக்க விண்வெளித்துறை நாசா’வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.
* உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
1. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
2. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக் கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி.
3. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சமஸ்கிருதம் இந்தியாவின் தொன்மையான மொழிகளுள் ஒன்று.
4. ஹாட் மெய்ல்’ஐ (HOT MAIL) உருவாக்கிய வரும் ஸ்தாபித்த வருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.
5. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
6. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
7. அல்ஜீப்ரா’வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
8. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
9. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987 ல் அறிவித்தது.
10. நுண் கணிதத்தை (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
11. திரிகோணமிதியை (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா
12. கூகுள்’ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
13. ஹெச்பி’யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்
14. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக் கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
15. பை (PI) 314 ‘க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6 ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர் அவர்.
16. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும், 3500 வார மற்றும் மாத இதழ்களும், 1 கோடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
17. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.
18. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
19. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா. இதில் இங்கிலாந்து கூட இந்தியாவுக்கு அடுத்த இடம் தான்.
20. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு உண்டு.
21. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்.
இப்படியாக உலக அளவில் இந்தியாவும், இந்தியர்களும் செய்துள்ள சாதனைகள் ஏராளம். அந்த வகையில் நாமும் சாதிப்போம். இந்தியனாய் பெருமை கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...